உத்திரப்பிரதேசத்தில் புலியானது பலியானது

2015-06-17T124504Z_651655820_GF10000130412_RTRMADP_3_GEORGIA-FLOOD
உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு புலி அங்குள்ள மக்களிடம் தொடர்ந்து தொந்தரவு செய்ததால் மக்கள் அதை அடித்துக் கொன்றனர்.
உத்திரப்பிரதேசத்தின் வபிஜ்னூர் மாவட்டத்தில் உள்ள ஹால்டுவாலா என்ற கிராமத்தில் உள்ள புலி ஒன்று அங்குள்ள இரண்டு மனிதர்களை அடித்துக்கொன்றது.  இந்தப்புலியானது அந்தப்பகுதியில் உள்ள வனப்பகுதியில் இருந்து வழிதவறி வந்துவிட்டது.
அந்தக்கிராமத்தில் உள்ள கோழிப்பண்ணையில் வேலை செய்து கொண்டிருந்த இரு வேலையாட்களைத்தான் அடித்துக்கொண்டிருக்கின்றது. மேலும் இந்த சம்பவத்தால் அந்தப்புலியை பிடித்துக்கொடுக்க நிறைய முறை முயற்சி செய்துள்ளனர்.  ஆனால் அந்தப்புலி சிக்காமல் இருந்ததால் ஆவேசமடைந்த கிராம மக்கள் புலி வசமாக மாட்டியவுடன் அதை அடித்தே கொன்றனர்.
இந்த செய்தியைக் கேட்டு அங்குள்ள வன அதிகாரிகள் வந்து புலியை கொன்றதற்காக விசாரனை மேற்கொண்டுள்ளனர்.  இரண்டு மனிதர்கள் மற்றும் கால்நடைகளை வேட்டையாடிய ஒரு புலியை  மக்கள் ஆவேசமாக தாக்கி கொன்றது பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.