சிறையில் இருந்துகொண்டே பிரச்சாரம் கூட செய்யாமல் வெற்றி பெற்ற MLA

download (85)
நம்ம ஊரில் எம்.ஜி.ஆர் மருத்துவமனையில் இருந்து கொண்டே தேர்தலில் ஜெயித்தது போல பீகாரில் ஒரு அமைச்சர் சிறையில் இருந்து கொண்டே பிரச்சாரம் செய்யாமல் வெற்றி பெற்று எம் எல் ஏ ஆகிவிட்டார்.
பீகார் மாநிலத்தில் உள்ள MLA ஆனந்த் சிங் ஒருநாள் கூட பிரச்சாரம் செய்தது கிடையாது. மொகாமா தொகுதியில் போட்டியிடும் புதிய MLA க்களில் ஆனந்த் சிங் ஒருவர் ஆவார். இவரின் மீது பல வழக்குகள் உள்ளன்.  அதில் 5 கொலை வழக்குகள் மற்றும் 6 கொலை முயற்சி வழக்குகள் என 16 வழக்குகள் இவருக்கு எதிராக உள்ளது.
ஆனந்த் சிங் குடும்பத்தினர் அவரை சோட்டா சர்க்கார் (தமிழில் சின்ன அரசாங்கம்) என்று அழைக்கின்றனர்.  மக்கள் அவரை ”ராபின்ஹூட்” என்று அழைக்கின்றனர்.
பொதுமக்களின் பிரச்சினைகளை ஆனந்த் சிங் நேரடியாக தீர்த்துவைத்துவிடுவார்.  அவர் மொகாமாகவின் ராபின் ஹூட் ஆவார் அவரிடம் திருமணப்பிரச்சினைகள் வந்தால் உடனே அவர் தீர்த்துவைப்பார்.
அவர் மீது பொய் வழக்குகள் சுமத்தியிருக்கின்றார்கள் என்ற அவரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கூறியிருக்கின்றனர். எப்படியோ அவர் கிரிமினல் வழக்குகளில் சிக்கி சிறையில் உள்ளார் என்று தெரிந்தும் மக்கள் அவரை 18 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்துள்ளனர். நிச்சயம் ஆனந்த் சிங் மக்கள் மனதில் ராபின்ஹூட் ஆகத்தான் இருப்பார்.
வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.