அரைநாண் கயிற்றின் முக்கியத்துவம்

2872281_large

அரைநாண் கயிறு என்பது நமது உடலில் பாதியான இடுப்பில் ஆண்களுக்கு கட்டப்படும் கயிறு ஆகும்.  சிலர் இதை வெள்ளியில் கட்டுவர்.  இன்னும் சிலர் தங்கத்திலும் கட்டுவர்.  குழந்தைகளுக்கு இடுப்பில் அரைநாண் கயிற்றினை பிறந்த சில மாதங்களில் கட்டிவிடுவார்கள்.

ஆனால் நாகரிக வளர்ச்சியில் அரைநாண் கயிற்றினை இப்போது மறந்து விட்டார்கள் என்றாலும் அதன் முக்கியங்களை நாங்கள் தருகின்றோம்.

அரைநாண் கயிறு, இடுப்புக் கயிறு, அரைக்கயிறு, அண்ணாக்கயிறு என நிறைய பேர்கள் பேச்சு வழக்கில் இதற்கு உள்ளன.  ஆனால் அதன் முக்கியத்துவம்  எத்தனை பேருக்கு தெரியும்?.  ஆண்கள் எப்போது உழைத்துக்கொண்டே இருப்பார்கள்.  அதனால் அவர்களின் உணவு சற்று பெண்களோடு அதிகமாக இருக்கும் அதே சமயம் மார்புப்பகுதியில் உள்ள விலா எலும்பானது நுரையீரலை பாதுகாக்கும் ஆனால் வயிற்றுப்பகுதியில் எவ்வித எலும்பும் பாதுகாப்புக்கு கிடையாது.

சாப்பிட்டப்பின் குடலிறக்கம் ஏற்படும் அதனால் இடுப்புக்கயிறு கட்டி அந்த குடலிறக்கம் ஏற்படும் போது இடுப்புக்கயிறு அதை தாங்கிப்பிடித்துக்கொள்ளும். அதற்காகத்தான் இடுப்புக்கயிற்றைக் கட்டினார்கள் காலப்போக்கில் வெள்ளி, தங்கம் என இடுப்புக்கயிற்றின் வடிவம் மாறி இப்போது நாகரிக வளர்ச்சியில் நிறைய பேர் அணிவதில்லை.  ஆனாலும் இன்னும் நாட்டுப்புறத்தில் இடுப்பில் அரைநாண் கயிற்றினை கட்டிக்கொண்டுதான் இருக்கின்றார்கள்.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.