”பரு” மற்றும் ”மரு” வை அகற்ற சிறந்த வழிமுறை

download (84)

பெண்களுக்கும் மற்றும் ஆண்களுக்கும் சரி மரு என்ற சதை உடலில் தோன்றி வளர ஆரம்பித்துவிடுகின்றது.  இதில் பால் மரு மற்றும் சிறிய மரு என்று உள்ளது.  பால் மரு சில நாட்கள் வளரும் பின் அதுவாகவே பொரிந்து கொட்டிவிடும்.  ஆனால் சிறிய மரு மிகச் சிறியதாக  ஆரம்பித்து வாழ்நாள் முழுக்க உடலில் வளரும்.

images (69)

அம்மான் பச்சரிசி

இதனால் எந்த குறைபாடும் இல்லை.  இதை நீக்குவது மிகவும் எளிது.  இதற்காக அழகுநிலையத்திற்கு சென்றால் அங்கு மருவை அகற்றுகின்றேன் என்று துண்டித்துவிடுவார்கள் இது தேவையற்ற வலி மற்றும் ஒரு மருவைக் கிள்ளினால் நிறைய மருக்கள் அதன் அருகிலேயே தோன்ற ஆரம்பிக்கும்.

எனவே இயற்கை முறையில் மருவை ஒரு வாரத்தில் நீக்கிவிடலாம் அதன் வடுவும் நீங்கிவிடும். அம்மான் பச்சரிசி என்ற தாவரம் (நிலத்தில் படரும் தாவரம்) மூலிகை தாவரம்.  இதைக் கிள்ளினால் அதில் இருந்து பால் வரும்.  அந்தப் பாலை பரு மற்றும் மரு இரண்டிலும் நன்றாக தடவவும். தினமும் தடவிவந்தால் ஒரே வாரத்தில் பருக்களும் மருக்களும் காய்ந்து கொட்டிவிடும் பின்னர் தானாகவே வடுக்களும் மறைந்துவிடும்.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.