விண்வெளியில் இருந்து மர்மப்பொருள் நாளை (13-11-2015) காலை (11-10-AM) க்கு இந்தியப்பெருங்கடலில் விழும்

images (66)

விண்வெளியில் இருந்து வெகுநாட்களாக புவியை நோக்கி வந்து கொண்டிருக்கும் மர்மப்பொருளை தினமும் ஆராய்ச்சியாளர்கள் கண்காணித்துதான் வருகின்றனர்.  இந்த மர்மப்பொருள் நாளை காலையில் 11 மணியளவில் இந்தியப்பெருங்கடல் இலங்கையின் கடற்பகுதியில் விழும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

meteor-junk

மர்மப்பொருள் விழும் என்று எதிர்பார்க்கப்படும் இடம்

அந்த மர்மப்பொருள் உடைந்த விண்கற்கள் அல்லது விண்வெளிக்கப்பலின் பாகமாக இருக்கலாம்.  இது கடலில் விழுந்து விடுவதால் எவ்விதப்பாதிப்பும் யாருக்கும் வராது.  ஆனால் அப்பகுதிக்கு நாளை மீன்பிடித்தடை மற்றும் விமானப்போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

நாளைக் காலையில் இந்த நிகழ்வு முடியும் வரை கடற்கரைப்பகுதிகளில் தடை நீங்காது. விண்வெளி ஆராய்ச்சியாளர் கூறுகையில் அந்த மர்மப்பொருள் விண்வெளிகப்பலாக இருந்தாலோ அல்லது விண்கற்களாக இருந்தால் அது வளிமண்டலத்தில் நுழையும் போதே எரிந்து விடும் வாய்ப்புள்ளது. ஆனால் மக்களுக்கு அது என்னவென்று பார்க்கவேண்டும் என்று ஆர்வத்தில் உள்ளனர்.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.