ஆபாச படம் காட்டி மாணவிளிடம் சில்மிசத்தில் ஈடுபட்ட தலைமை ஆசிரியருக்கு தர்ம அடி

gallerye_074745795_1381925

ஒமலூரின் அருகே உள்ள அரசுப்பள்ளியின் தலைமை ஆசிரியர் தனது மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததை அடுத்து பொது மக்கள் தர்ம அடி கொடுத்துள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் ஒமலூருக்கு அருகேயுள்ள எம். செட்டிபட்டி என்ற ஊரில் உள்ள உ.ஒ. துவக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக சுப்ரமணியம் (58) கடந்த ஓராண்டாக பணிசெய்து வருகின்றார்.

gallerye_074752153_1381925

கோபத்தில் த.ஆசிரியரின் பைக்கை உடைக்கும் பெற்றோர்கள்

சபலபுத்தியுடைய இந்த ஆசிரியர் தனது லீலைகளை ஐந்தாம் வகுப்பு படித்து வரும் மாணவியரிடம் காட்டியுள்ளார்.  அவர்களுக்கு பாடம் எடுக்கும் போது லேப்டாப்பில் ஆபாச படங்களை காட்டி அவர்களிடம் சில்மிசத்தில் ஈடுபட்டுள்ளார்.  மேலும் அக்குழந்தைகள் வெளியில் சொல்லாமல் இருக்க சாக்லெட் போன்ற தின்பண்டங்களை அடிக்கடி வாங்கிக்கொடுத்துள்ளார்.

gallerye_074745795_1381925

தலைமை ஆசிரியர் சுப்ரமணியன்

ஆசிரியரின் பாதிப்புக்குள்ளான மாணவியரில் ஏழுபேர்கள் சரியாக உணவு உண்ணாமல் போக்கில் மாற்றம் ஏற்பட்டுள்ளனர்.  பெற்றோர்கள் என்னவென்று கேட்க அதில் ஒரு மாணவி தலைமை ஆசிரியரின் செய்கையை கூறியுள்ளார்.

பெற்றோர்கள் திரண்டு வந்து தலைமை ஆசிரியரைக் கேட்டதற்கு முன்னுக்கு பின்னான தகவலை கொடுத்துள்ளார்.  உடனே கோபமுற்ற பெற்றோர் ஆசிரியரை பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர். மேலும் தகவல் அறிந்து காவல் நிலையத்தில் இருந்து வந்த போலிஸ்கள் சண்டையை விலக்கி விட்டு ஆசிரியரை கைது செய்தனர்.

சரியான புகாரை எடுக்காததால் பெற்றோர்கள் அருகில் உள்ள குடிநீர் (மேல்தேக்க) தொட்டியில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தனர்.  இதனால் ஆசிரியரின் மீது புகாரைப்பெற்று முறையாக கைது செய்தனர். எஸ்.பி  சுப்புலட்சுமி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மக்களை சமாதானம் செய்தார்.

ஆசிரியரே இப்படி பிள்ளைகளிடம் தவறாக நடப்பது மிக பெரிய குற்றமாகும்.  இவருக்கு சரியான தண்டனை கிடைக்க வேண்டும் என்று மக்கள் கூறினா்.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.