அடுத்த லட்சியம் IPS ஆகவேண்டும் என்பதுதான்-திருநங்கை பிரித்திகா யா

download (81)

நேற்றைய இடுகையில் எங்களது இணையத்தில் இந்தியாவில் முதன் முதலாக திருநங்கை ஒருவர் உதவி ஆய்வாளர் பணிக்கு தேர்வாகியுள்ளார்.  என்று தெரிவிக்கப்பட்டது இன்று திருநங்கை பிரித்திகா யாஷினி  அளித்த பேட்டியொன்றில் தனது லட்சியம் உதவி ஆய்வாளராவது மட்டுமல்ல IPS அதிகாரி ஆக வேண்டும் அதுதான் லட்சியம் என்றார்.

சேலம் மாட்டம் கந்தம்பட்டியைச் சேர்ந்தவர் பிரித்திகா யாஷினி அவர் தனது பதின்ம வயதிலே உடலில் மாற்றங்கள் ஏற்பட்டு திருநங்கையாக மாறிக்கொண்டார்.   இவர் ஆணாக இருந்து பெண்ணாக மாறியவர்.  பெற்றோர் இவருக்கு பிரதீப் என்று பெயர் வைத்துள்ளனர்.   பெண்ணாக மாறியதால் பிரித்திகா யாஷினி என்று தனது பெயரை மாற்றிவைத்துள்ளார்.

அவர் கூறியதாவது சமுதாயத்தில் திருநங்கைகள் சரியாக நடத்தப்படுவதில்லை திருநங்கையாக நாங்கள் மாறியது எங்கள் குற்றமில்லை இது கடவுளின் படைப்பு இதில் எங்கள் குறையொன்றுமில்லை வாழ்வது எங்கள் உரிமை.  நான் இந்த அளவுக்கு வருவதற்கு என் பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தில் உள்ளவர்கள் உதவிக்கு நன்றி.

இன்று பல தடவைகள் தாண்டிதான்  இந்த நிலை கிடைத்தது.  என்றாலும் இது போதாது இன்னும் நிறைய இன்னல்களை என்னைப்போன்றவர்கள் அனுபவிக்கின்றார்கள்.  கடந்த பத்து வருடங்களாக திருநங்கைகளின் நிலை மாறிவிட்டது.

எதிர்காலத்தில் IPS அதிகாரியாகி சிறந்த முறையில் பணியாற்றுவேன்  இது தான் என் லட்சியம்.  என்று கூறினார்.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.