திருநங்கை முதன் முதலாக எஸ். ஐ ஆகின்றார்

44

முதன் முதலாக தமிழகத்தில் திருநங்கை ஒருவர் எஸ். ஐ (உதவி ஆய்வாளர்) ஆகப்போகின்றார். ஆனால் அதற்கு அவர் சந்தித்த தடங்கல் கள் பல.

சேலம் மாவட்டத்தைச்சேர்ந்த திருநங்கை பிரித்திகா யாஷினி. சிலகாலம் முன் ஆணாக இருந்து பெண்ணாக மாறியவர்.  பின்னர் தான் தன் பெயரை யாஷினி என்று மாற்றிக்கொண்டார்.  இவருக்கு தமிழக காவல் படையில் சேர விருப்பம் இதனால் உடற்தகுதியை வளர்த்துக்கொண்டு உதவி ஆய்வாளர் பதவிக்கு தேர்வு எழுதினார்.

ஆனால் தமிழக சீருடைப்பணியாளர் குழுமம் இதை நிராகரித்தது.  அதைத் தொடர்ந்து அவர் வழக்கு தொடர்ந்தார்.  அந்த வழக்கை விசாரித்த நீதிபதி. ”கண்டிப்பாக மூன்றாம் பாலினத்தை சேர்க்கவேண்டும் அவருக்கு எல்லா உடற்தகுதியும் உண்டு.  ஆணின் வீரம் மற்றும் பெண்ணின் குணம் என்ற அனைத்தும்பெற்ற பிரித்திகாவை கண்டிப்பாக காவலில் சேர்க்கலாம் அதே சமயம் இது மற்ற திருநங்கை களையும் ஊக்குவிக்கும்.

இதனால் அவர் எஸ்ஐ ஆக பரிந்துரிக்கப்படுகின்றார். இந்த நிகழ்வு தமிழகத்தில் முதன்முறை மற்றும் இவர் காவல் துறையில் இருந்தால் மிகுந்த கவனிப்புடன் பணியாற்றுவார் என்று நம்பப்படுகின்றது.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.