கோயம்புத்தூரில் வெடிவிபத்து முதியவரும் நாயும் பலி

TamilDailyNews_8215252161027

கோயம்புத்தூரில் ஒரு வீட்டில் பதுக்கி வைத்திருந்த வெடிபொருள் வெடித்து உருவான விபத்தில் ஒரு முதியவர் உயிரிழந்தார்.

தீபாவளி சமயமாதலால் எந்த வெடிச்சேதமும் ஏற்படாமல் இருக்க காவல் நிலையத்தினர் மிகுந்த கவனத்துடன் உள்ளனர். இருந்தும் வெடிச்சேதங்கள் கையை மீறி நடந்து விடுகின்றன. அவ்வாறு தான் கோவையில் செல்வபுரம் பகுதியில் வெடிவிபத்து நடந்துள்ளது பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

செல்வபுரம் பகுதியில் உள்ள கெம்பட்டி காலனியைச் சேர்ந்தவர் தேவி இவர் தனியார் ஒருவரின் தோட்டத்தில் வேலை செய்கின்றார். அவரது மகன் நவீன் அவர் தனியார் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கின்றார். தேவி குடியிருந்த வீடு இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டிருந்தது. அதில் ஒரு பகுதியில் தேவி மற்றும் நவீன் வாழ்ந்து வந்தனர். மற்றொரு பகுதியில் அவரது தந்தை மற்றும் தேவியின் சகோதரி மற்றும் அவரின் கணவர் என மூன்று பேர்கள் வாழ்ந்து வந்திருக்கின்றனர்.

சில நாட்கள் தந்தையின் வீட்டிற்கு நிறைய பேர் வந்து சென்றிருக்கின்றனர். இந்த நிலையில் தீபாவளிக்கு பட்டாசுக்கடை வைக்க அவரது வீட்டில் பட்டாசுகளை வாங்கி அடுக்கி வைத்துள்ளனர். மேலும் சில பட்டாசுக்களை அந்த வீட்டில் தயாரித்து வந்துள்ளனர்.

நேற்று திடீரென்று பொரி பட்டதால் பட்டாசு வெடித்து சிதறியது. பெரிய வகை பட்டாசுக்கள் நிறைய இருந்ததால் பட்டாசுக்கள் பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது இதனால் அவர்கள் வாழ்ந்து வந்த வீடு தரைமட்டமாகின.

தீயணைப்பு வீரர்கள் வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர். வெடிவிபத்தில் குடியிருந்த வீட்டின் இரண்டு பகுதிகளும் மற்றும் அருகில் உள்ள வீடுகளின் சுவர்களும் இடிந்து விழுந்துவிட்டது. வீட்டில் இருந்த முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த வீட்டில் நாய் ஒன்றும் இறந்துவிட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக மூன்று பேரை போலிஸார்கள் கைது செய்துள்ளனர். இந்த வெடிவிபத்தில் தேவியும் கைது செய்யப்பட்டுள்ளார். வெடியை பதுக்கி வைக்கக்கூடாது மற்றும் பதுக்கி வைப்பது குற்றம். அலட்சியமாக இருந்தது. தவறு என்று தெரிந்தும் காவல் நிலையத்தில் புகாரளிக்காமல் இருந்தது என்று பல வழக்குகளின் அடிப்படையில் கைது செய்துள்ளனர்.

இதில் முக்கியக் குற்றவாளியான சிவக்குமார் தலைமறைவாகினார். அவர் ஏற்கனவே 2011 தீபாவளியில் பட்டாசு பதுக்கி வைத்திருந்ததால் கைது செய்யப்பட்டார்.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.