அந்தேரியில் காதலர்களை தாக்கிய காவலர்கள் – வீடியோ பரவல்

2015110407L

மும்பை காவல் நிலையத்தில் காதலர்களை காவலர்கள் சாரமாரி தாக்குதலில் ஈடுபட்டனர். அங்கே நடந்த சண்டையை வீடியோ எடுத்து சமூக வளைதளத்தில் விடப்பட்டதால் மேலும் பரபரப்பு.

மும்பையின் அந்தேரிப்பகுதியில் கால் சென்டர் ஒன்றில் வேலைபார்க்கும் ஆண் மற்றும் பெண் இருவர்கள் காதலர்களாகினர். காதலகளுக்குள் ஏற்பட்ட பிரச்சினையில் அங்குள்ள ஒரு ஒட்டலின் முன்பு அடித்துக்கொண்டார்கள். அதை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் கண்டு அவர்களை விசாரனைக்கு காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர்.

காவல் நிலையத்திற்கு சென்றப்பின் நிலைமையை உணர்ந்த காதலர்கள் ஒருவர் கையை ஒருவர் பிடித்துக்கொண்டு நின்றிருக்கின்றனர்.  காவலர்கள் கோபத்தில் கையை விடுவிக்க சொல்லியும் அவர்களை பிரியாமல் பயத்தில் நின்றுள்ளனர்.  அதிக கோபமுற்ற காவலர்கள் அவர்களை சராமரியாக தாக்கியுள்ளனர்.  பெண்ணின் கன்னத்தில் மாற்றி காவல் துறையினர் அறைந்துள்ளனர். அதனால் பெண்ணின் வாயில் இரத்தம் வந்துள்ளது.

அதைக்காவல் நிலையத்தில் இருந்தவர்கள் வீடியோ எடுத்து இணையதளத்தில் வெளிவிட்டுள்ளனர். மேலிடத்திற்கு அந்த வீடியோ வைரலாக மாறி காவலர்கள் அதற்கு பதிலளிக்கும் படி கேட்டுக்கொண்டனர்.

காவலர்கள் தன் தரப்பில் கூறியதாவது ஆணும் பெண்ணும் சச்சரவில் ஈடுபட்டனர். நாங்கள் அதை சமாதானப்படுத்த காவல் நிலையம் அழைத்து வந்தோம். இங்கும் வந்தும் சண்டையில் ஈடுபட்டனர். ஆண் பெண்ணின் கையை பிடித்து சண்டைக்கு இழுத்தான் இதனால் நாங்கள் அவர்களை பிரித்து வைத்துவிட்டு அவரது பெற்றோர்களை அழைத்து கண்டித்துவிட்டு வீட்டுக்கு அனுப்பிவிட்டோம். என்று கூறினர்.

சமீப காலமாக காவலர்கள் மக்களிடம் நடந்து கொள்ளும் விதம் சரியானதாகவில்லை என்று  மேலிடத்துக்கு புகார் வந்துள்ளது.

http://www.abplive.in/india-news/viral-video-andheri-police-brutally-beat-a-couple-inside-station-thrashes-woman-until-she-bleeds-239264

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.