ஸ்டாலினுடன் பேச மது பாட்டிலுடன் வந்த மாணவி

Tamil_News_large_1379891

வேலூரில் நேற்று நடந்த பொறியியல் கல்லூரியொன்றில் மாணவர்களிடம் பேசிய திமுக செயலாளர் திரு. மு. க. ஸ்டாலின் அவருக்கு பரிசாக மாணவியொருவர் மது பாட்டில் உடன் வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்றைய தினம் ஸ்டாலின் அவர்கள் வேலூரில் உள்ள அப்துல் ஹக்கீம் பொறியியல் கல்லூரிக்கு சென்று மாணவர்களிடம் பேசுவதற்காக அரங்கத்தில் கூடினார். அப்போது மாணவியொருவர் ஸ்டாலினிடம் பேச வரும் போது அவர் தன் கையில் மது பாட்டில் ஒன்றை  எடுத்து வந்தார். இவர் காட்பாடியைச் சேர்ந்த செல்வி. நிவேதிதா.

ஆனால் அவர் மது பாட்டில் எடுத்து வந்தது ஸ்டாலினுக்கு கொடுக்க அல்ல. ” அந்தப்பெண் கூறியதாவது என் தந்தை இந்த மதுவைக் குடித்து குடித்துதான் இறந்து போனார். தமிழ்நாட்டில்  இன்னும் எத்தனையோ குடும்பங்கள் மதுவின் பிடியில் சிக்கி தவிக்கின்றது. இதற்கு தங்களிடம் என்ன வழியிருக்கின்றது என்று கேட்டார்.

அதற்கு ஸ்டாலின் அவர்கள் கூறியதாவது ” நாங்கள் ஆட்சிக்கு வந்த முதல் கையெழுத்து அந்த மதுக்கடையை மூடுவதுதான் என்று கூறினார். ”  இதைப்பற்றி முன்னரே கருணாநிதி அறிவித்துவிட்டார். என்று பதிலுரைத்தார்.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.