மனைவியின் மீது பலாத்கார வழக்கு தென்கொரியாவில் வினோதம்

male-slave-as-human-pet

நேற்றுதான் ஆண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைக்கு ஆண்களைப்பாதுகாக்க  சீன அரசு ஆண்கள் பாதுகாப்பு சட்டத்தை இயற்றியது.  இதன் மூலம் ஒரின சேர்க்கை மற்றும் வன்புணர்வில் ஈடுபடுத்தப்படும் ஆண்களை பாதுகாக்கப்படும்.  ஆனால் தென் கொரிய நாட்டில் முதன் முதலாக தன் மனைவி என்னை கட்டாயப்படுத்தி பலாத்காரத்தில் ஈடுபட்டார்   என்று கூறி வழக்கு தொடுத்துள்ளார்.

தென் கொரியாவின் சியோல் பகுதியில் 40 வயது பெண் ”ஷிம்”  தன் கணவரை வற்புறுத்தி பலாத்காரம் செய்துள்ளார்.  இதனால் அவரது கணவர் தன் மனைவியின் மீது பாலியல் பலாத்கார வழக்கு தொடுத்துள்ளார்.

ஷிம்மும் அவரது கணவரும் தனித்தனியே விவாகரத்து வழக்கு தொடுத்துள்ளனர். அவர்கள் விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ளது.  சரியான காரணங்கள் கிடைக்காததால் ஷிம் தன் கணவரை 29 மணிநேரம் அறையில் பூட்டி வைத்துள்ளார்.

பின்னர் அவரை கட்டாயப்படுத்தி உறவும் கொண்டுள்ளார்.  மனைவியை பிடிக்காததால் தான் விவாகரத்து கோரியிருக்கும் அவரது கணவரால் இதை சகிக்க முடியாமல் ஷிம் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.

மேலும் ஷிம்-ன் நோக்கம் கணவர் தன்னை இப்படி பலாத்காரம் செய்து விட்டார் என்று வழக்கை திசை திருப்பி விடலாம் மேலும் விவாகரத்துக்கும் சரியான சாட்சியம் கிடைக்கும் என்று எண்ணி இந்த செயலில் ஈடுபட்டுள்ளார்.  ஆனால் அதற்குள் அவர் கணவர் முந்திக்கொண்டு மனைவியின் பேரில் புகார் அளித்துள்ளார்.

தென் கொரிய சட்டத்தின் படி 2013 ஆம் ஆண்டிலிருந்து திருமணமானவர்களே இருந்தாலும் கட்டாயப்படுத்தி உறவு கொள்வது சட்டவிரோதமாகும்.  இதற்கு தண்டனையும் கிடைக்கும்.  வேண்டுமென்றால் விவாகரத்தும் கிடைக்கும்.

கணவரின் தரப்பு வக்கீல்கள் இந்த வழக்கை விசாரித்து நீதிமன்றத்தில் வழக்காடி வருகின்றன.  இதனால் தான் இந்தியாவிலும் ஆண்களை பாதுகாக்கும் சட்டம் தேவைப்படுகின்றது.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.