சனியின் துணைக்கோள்களில் ஒன்றில் உயிரினங்கள்

download (79)

விண்வெளி ஆராய்ச்சிகளின் குறிக்கோள் என்னவென்றால் அது புவியைப்போன்ற உயிரினங்கள் வாழும் கோள்களைக் கண்டுபிடிப்பதுதான்.   ஆனால் அவ்வாறு கண்டுபிடிக்க முடியவில்லை என்றாலும் அதைச் சார்ந்த தகவல்கள் அவ்வப்போது நாசா வெளிவிடுவதுண்டு அதைப்போல் சனிக்கோளின் 62 துணைக்கோள்களில் ஒன்றான என்சிலாடஸ் என்ற துணைக்கோளில் உயிரினங்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் காணப்படுவதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

சனிக்கிரகத்தை சுற்றி நிறைய துணைக்கோள்கள் சுற்றி வருவதால் அதற்கு பெயரிடுவதற்கு குழப்பமாக உள்ளது.  இது வரைக்கும் ஆதாரப்பூர்வமாக 62 துணைக்கோள்களில் 50 துணைக்கோள்களுக்கு பெயர் வைத்துள்ளனர்.

சனிக்கோளைச்சுற்றி வருகின்ற மற்ற துணைக்கோள்களைவிட டைட்டன் தான் பெரியது. இது நம் நிலவைப்போன்று பிரகாசமானது.  சனிக்கோளை ஆராய்ச்சி செய்ய அனுப்பிய காசினி (1997)  தான்  இன்று என்சிலாடஸில் கடல் வரிகளைப்போல உள்ள படத்தை அனுப்பியுள்ளது.  அதனால் ஆராய்ச்சியாளர்கள் மேலும் ஆராய்ச்சி செய்ய தொடங்கியுள்ளனர்.

 

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.