இனி ஆண்களையும் பாதுகாக்கும் பாலியல் பலாத்காரத்தை தடுக்கும் சட்டம்

male-slave-as-human-pet

பாலியல் பலாத்காரத்தால் இளம்பெண்கள் மட்டுமின்றி நடுத்தர வயதுப்பெண்கள் மற்றும் சிறுவயது குழந்தைகள் என அனைவரும் பாதிக்கப்படுகின்றனர்.  சீனாவில் பாலியல் பலாத்காரத்தை தடுக்க புதிய சட்டம் இயற்றியுள்ளது.

இந்த சட்டத்தின்படி பெண்கள் பாலியல் புகார்களைக் கொடுக்கும் பட்சத்தில்  சட்டம் உடனடியாக நடவடிக்கை எடுத்து குற்றம் செய்த நிலையைப் பொறுத்து குறைந்தபட்சமாக 7 வருட சிறை மற்றும் அதிகபட்சமாக மரணதண்டனை நிறைவேற்றப்படும்.

இந்த சட்டத்தின் இன்னொரு சிறப்பு என்னவென்றால்  இது ஆண்களையும் பாலியல் பலாத்காரத்தில் இருந்து பாதுகாப்பது தான்.  சில ஆண்கள் பெண்களிடம் அடிமையாகவோ அல்லது வற்புறுத்தப்பட்டோ பாலியல் உறவுகளில் ஈடுபடுகின்றனர்.  இது ஆண்களுக்கு உடலளவில் எவ்விதப்பிரச்னையும் தருவதில்லை ஆனால் ஆண்களின் மனதளவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.  அப்படிப்பட்ட ஆண்களை பாதுகாக்க எவ்விதச்சட்டமும் இல்லை ஆனால் முதல் முதலாக சீனாவில் இதுவும் ஒரு குற்றம் தான் பாலியல் பலாத்காரம் யாருக்கு நடந்தாலும் அது குற்றமாக கருதப்படும் என்று அதற்கு சட்டம் இயற்றியுள்ளது.

இந்தச்சட்டத்தில் ஆண்களை வன்புணர்வில் ஈடுபடுத்தி ஒரினச்சேர்க்கை (கே கலாச்சாரம்) யில் பாதிக்கப்பட்ட ஆண்களும் பாதுகாக்கப்படுகின்றனர்.  சீனாவில் ஆண்களைப்பாதுகாக்கவும் சட்டம் இயற்றப்பட்டது வரவேற்கத்தக்கது.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.