நான் மாட்டிறைச்சி சாப்பிடுவதை யாராலும் தடுக்க முடியாது-சித்தாராமையா ஆவேசம்

நாடு முழுவதும் இப்போது ஒரே சூறாவளியென்றால் அது இந்த மாட்டுக்கறிப் பிரச்சினைதான் என்னதான் நாட்டில் நடக்கின்றது என்று சித்தாராமையா (கர்நாடக முதல்வர்) கேட்டுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சி வந்தவுடன் நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்துவிட்டது இதனால் குற்றங்கள் நிறைய ஏற்படுகின்றன. இவ்வளவு காலமாக மாட்டிறைச்சி தின்றவர்களை இப்போது சாப்பிடாதீர்கள் என்று சொன்னால் எப்படி சாப்பிடாமல் இருப்பார்கள்.
இதனால் மாட்டுக்கறி தின்றார்கள் என்ற போலி மதவாதத்தை அடிப்படையாக கொண்டு மற்ற மதத்தின் கோட்பாடுகளை தகர்ப்பது. மற்றும் இது போன்ற செயல்களில் கொலை கொள்ளை போன்ற சம்பவத்தில் ஈடுபடுவது என்று எண்ணற்ற வேலைகளை போலி மதவாதக் கும்பல் செய்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும் மோடி இதற்கு எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படாமல் இருப்பது மத்திய அரசுக்கு பல கேள்விகளை உண்டாக்குகின்றது.
அதே சமயம் நான் இது நாள் வரையில் மாட்டுக்கறி சாப்பிட்டதில்லை அப்படி தின்றாலும் அது என் விருப்பம் அதில் யாரும் தலையிட முடியாது. நான் வேண்டுமானால் சாப்பிடுகின்றேன் என்னை யாராலும் தடுக்க முடியாது என்று கூறியுள்ளார். பஜகாவைச் சேர்ந்த சங் பரிவார் அமைப்புகள் பல அத்துமீறல்களை செய்து வருகின்றனர்.
இது மிகவும் தவறானது இது குறித்து மத்திய அரசு விளக்கம் தர வேண்டும் என்று கூறியுள்ளார். கர்நாடக முதல்வர் இவ்வாறு கூறியுள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.