மேலும் ஒரு நியாய தீர்ப்பு-கற்பழித்தவனுக்கு தூக்குதண்டனை

201510310430326997_Woman-engineerRapeTo-killedSentenced-to-death_SECVPF

மும்பையில் வேலை செய்து வந்த சாப்ட்வேர் நிறுவன பெண் ஊழியர் (எஸ்தர்) கற்பழித்து கொலைசெய்யபட்டது.  மகளிர் நீதிமன்றத்தில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு.

ஆந்திராவின் மசூலிப்பட்டினத்தைச் சேர்ந்த எஸ்தர் அவரது தந்தை சுரேந்திர பிரசாத்.  23 வயதான எஸ்தர் சாப்ட்வேர் என்ஜினியர்.  இவருக்கு மும்பையில் கோரேகாவில் உள்ள ஒரு ஐடி கம்பெனியில் வேலை கிடைத்துள்ளது.  இதனை அடுத்து அந்தேரிப்பகுதியில் உள்ள ஒரு விடுதியில் தங்கி வேலைக்கு  சென்று வந்துள்ளார்.

அதேப்போல் குற்றவாளியான சந்திரபான் சனப் என்பவர் இரயில் நிலையத்தில் சுமைதூக்கும் தொழிலாளியாக வேலைசெய்து விட்டு இப்போது ஒரு தனியார் நிறுவனம் ஒன்றில் கார் டிரைவராக வேலை செய்து வந்துள்ளார்.

இரயிலில் தான் எஸ்தர் வேலைக்கு சென்று வந்திருக்கின்றார். சந்திரபான் சனப் 3 திருமணமாகி இரண்டு மனைவிகள் கிடையாது மூன்றாவது மனைவியுடன் தற்போது வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் 2014 ஆம் ஆண்டு சனவரி 24 ஆம் தேதி மும்பை வந்த எஸ்தர் திடீரென்று மாயமானார்.   தொடர்பு ஏதும் இல்லாததால் தந்தை சுரேந்திர பிரசாத் போலிஸூக்கு தகவல் தெரிவித்துள்ளார்.  10 நாட்களுக்கு பிறகு ஒரு ஓடையில் எஸதர் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

விசாரனையில் அந்த சந்திரபான் சனப் என்ற குற்றவாளி பிடிபட்டார்.  அவர் எஸ்தரை பைக்கில் லிப்ட் தருவதாக கூட்டிச் சென்று புதர்ப்பகுதியில் கற்பழித்துவிட்டு கழுத்தை நெறித்து கொலை செய்திருக்கின்றார். என்பது தெரியவந்துள்ளது.

ஒன்றரை ஆண்டுகளாக வழக்கு நடந்த நிலையில் இப்போது தீர்ப்பு வந்துள்ளது.  தீர்ப்பில் கூறியதாவது.  ” நாட்டில் இது போன்ற குற்றங்கள் அடிக்கடி நடக்க வாய்ப்புள்ளது பெண்களுக்கு என்று சட்டம் உள்ளது.  இது கொடூரமான செயல் என்றும் இதற்கு மரண தண்டனை அளிக்கப்படுகின்றது என்று கூறப்பட்டது.

எஸ்தரின் தந்தை மற்றும் சமூக ஆர்வலர்கள் இதை வரவேற்று உள்ளனர்.  நாட்டில் பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் கொடுமைகளுக்கு மரண தண்டனை ஒன்றே திருத்துவதற்கு வழி.  ஒரு தீய புத்தியில் செய்யும் தவறு தான் இது,  ஆண்கள் தங்கள் தாயைப்போன்று பெண்களை எப்போது மதிக்க ஆரம்பிக்கின்றார்களோ அப்போது தான் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் நீங்கும். அது வரை மரண தண்டைனையும் தடை செய்யப்போவதில்லை என்று மட்டும் உறுதி.  இந்த குற்றத்தில் ஈடுபட்டவர் தனியாள் இல்லை ஏற்கனவே மூன்று கல்யாணம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.