சோட்டாராஜன் இந்திய திரும்ப திட்டம்

201510301004176239_Chhota-Rajan-shifted-to-a-separate-cell-in-Denpasar-police_SECVPF

சோட்டா ராஜன் என்பவர் 20 வருடங்களாக இந்தியப்போலிஸால் தேடப்பட்டு வரும் குற்றவாளி. மும்பை நிழல் உலக தாதா இப்ராஹிம் தாவுத் என்பவரின் வலது கரமாக சோட்டா ராஜன் விளங்கினார். பின்னர் தாவுத்திடம் பகை வைத்துக்கொண்டு தாவுத்தையே தாக்க அவரும் பதிலுக்கு தாக்க இந்தியாவிலிருந்து தப்பித்து வெளிநாட்டுக்கு சென்றுவிட்டார்.  கொலை கொள்ளை போன்ற 75 வழக்குகளுக்காக சோட்டா ராஜன் தேடப்பட்டு வருகின்றார். 20 வருடங்களாக போலிஸ் கண்ணில் மண்ணைத்தூவி விட்டு இருந்த சோட்டா ராஜன் கடைசியாக ஆஸ்திரேலியாவில் இருந்தார்.  இந்தோனேசியாவின் தீவுக்கு வருகையில் அவரை இந்தோனேசிய காவல் படையினர் அடையாளம் கண்டு கைது செய்தனர்.

மேலும் தாவுத்திற்கு சோட்டா ராஜன் கைதான விசயம் தெரிந்தவுடன் அவரது ஆட்களால் சோட்டா ராஜன் உயிருக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடும் என்ற அச்சத்தால் சோட்டா ராஜன் பத்திரமாக காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதில் சோட்டா ராஜன் ”நான் இந்தியாவுக்கு மீண்டும் திரும்ப விரும்புகின்றேன்” என்று கூறியுள்ளார்.   இதில் அப்படி அவர் இந்திய போலிஸிடம் ஒப்படைக்கப்பட்டால் தாவுத்தின் இருப்பிடம் மற்றும் மேலும் தகவல்கள் தெரியவரும்.  இதனால் இந்தியப் போலிஸ் படையினர் பத்திரமாக சோட்டா ராஜனை கொண்டு வர முடிவெடுத்துள்ளனர்.

இருபது வருடங்களாக தேடப்பட்டு வரும் குற்றவாளி சிக்கியது மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.