நகைச்சுவை நடிகர் விவேக்கின் மகன் மரணம்

1446180447-7452
நகைச்சுவை நடிகர் விவேக்கின் மகள் பிரசன்ன குமார் என்பவர் நேற்று மூளைக்காய்ச்சலால் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
விவேக்-ஆருள் செல்விக்கு அமிர்தநந்தினி, தேஜஸ்வினி என்ற இரண்டு மகள்களும் பிரசன்ன குமார் என்ற 13 வயது மகனும் இருந்தனர்.  சென்னையில் கே.கே நகரில் உள்ள பத்மா சேசாத்ரி பள்ளியில் மகன் ஒன்பதாம் வகுப்பு படித்துவந்திருக்கின்றான். சில வாரங்களாக குமாருக்கு காய்ச்சலால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சிகிச்சை தொடர்ந்து விவேக் கொடுத்துக்கொண்டிருந்தார். ஆனாலும் காய்ச்சல் குணமாகவில்லை பரிசோதனையில் அவரைத்தாக்கிய காய்ச்சல் மூளைக்காய்ச்சல் என்று கண்டுபிடிக்கப்பட்டது. நாற்பது  நாட்களாக வடபழனியில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுக்கொண்டு குமார் இருந்திருக்கின்றார்.
நேற்று (அக்டோபர் 29, 2015) அன்று மிகுந்த கவலைக்கிடமான நிலையில் மருத்துவர்கள் எவ்வளவு போராடியும் குமாரைக் காப்பாற்ற இயலவில்லை.  பின்னர் குமாரின் உடலை சென்னை விருகம்பாக்கம் வீட்டுக்கு எடுத்துச்சென்றனர்.
பிரபலமான விவேக்கின் மகன் குமார் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்தது திரை உலகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.  விவேக்கின் நண்பர்கள் மற்றும் சக நடிகர்கள் அவரை ஆறுதல் படுத்துகின்றனர்.
நடிகர் சங்கத்தலைவர் நாசர் மற்றும் விசால் பொன்வண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.