ஜிம்முக்கு போகப்போறீங்களா இதைப்படிங்க முதலில் பகுதி-4

images (59)

இன்று நீங்கள் புதன் மற்றும் சனிக்கிழமை உடற்பயிற்சியை செய்கின்றீர்கள்

இன்றைய பெரிய தசை மார்பு மற்றும் டிரைசெப்ஸ் என்ற சிறிய தசைக்கும் உடற்பயிற்சிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஒருவன் ஜிம்முக்கு போகின்றான் அவன் வீரமான ஆண் என்று எடுத்துக்காட்டவே அவனது மார்பும் கைகளும் தான் உறுதியாக இருக்க வேண்டும்.  ராவணின் மார்பு அழகைக் காண கன்னியர்கள் கோடி என்று மார்பை புகழ்வார்கள்… அப்பேர் பட்ட மார்புக்கு தகுந்த உடற்பயிற்சி கொடுக்க வேண்டும்.

images (58)

டிரைசெப்ஸ்

அதேபோல் டிரைசெப்ஸ் என்பது பேக் ஆம்ஸ்… இது ஒரு அட்டகாசமான தசை பின் கைகளில் வளரும்.   பைசெப்ஸைக் கூட பிரஸ் பண்ணி போஸ் கொடுத்தால் தான் தெரியும் ஆனால் டிரைசெப்ஸ் சும்மா கையை தொங்கவிட்டாலே தெரியும். டைட்டான T-சர்ட் போடும் போதெல்லாம் தனியாக தெரியும். அதன் அருமையை சொல்லி மாளாது.

மார்புக்கு

Flat bench Barbell Press   – 3 செட்.

flat bench press

Incline bench Barbell Press  – 3 செட்.

download (2)

Decline bench Barbell Press  – 3  செட்.

download (71)

பட்டர்பிளை பரஸ் (அ) பெக் டெக் பிளை     3 செட்

build-your-best-chest-with-this-rest-pause-workout-graphics-2

டிரைசெப்ஸ்

download (72)

Over Head Dumbbell raise  – 3 செட்.

எல்லா ஜிம் களிலும் பிளாட் பென்ஞ் இருக்கும் ஆனால் இன்கிலைன் டிக்ளைன் பென்ச் இருக்காது இல்லாதவர்கள் கவலைப்படவேண்டாம் நன்றாக தண்டால் எடுக்க பழகிக்கொள்ளவும்.  என்னதான் பெஞ்ச வொர்க்கவுட் செய்து உடம்பை ஏற்றினாலும் தண்டாலில் ஏறும் அளவுக்கு இருக்காது. முதலில் குறைவாக செய்யவும் மார்பு விரிய விரிய கையை அகலமாக வைத்து செய்யவும். பெஞ்ச் வொர்க்கவுட் செய்யும் போது கண்டிப்பாக துணையாள் வேண்டும்.  இல்லையேல் வடிவேல் காமெடியாக மாறிவிடும் கவனம் தேவை.

மார்பு தான் ரொம்ப முக்கியம் இந்த வொர்க்கவும் செய்யும் போது உங்களுக்கு மிகுந்த மேல் மூச்சு வாங்கும்.  தண்டால் அதிகம் எடுக்க நுரையீரல் அதிகமாக விரியும்.  இப்போது சிகரெட் பிடிப்பவர்கள் இந்த வேலைக்கு ஒத்து வரமாட்டார்கள்.  எனவே சிகரெட் பிடிப்பவர்களால் மார்பை வளர்ப்பது கடினம்.

மேற் சொன்ன வொர்க்கவுட் செய்து விட்டு ஞாயிற்றுக்கிழமை நன்றாக ஒய்வெடுக்கவும். தவறியும் உடற்பயிற்சி செய்யாதீர்கள் அடுத்த வாரத்திற்கான ரெக்கவரி இந்த ஒரு நாளில் தான் கிடைக்கும். மறக்காமல் எண்ணை தேய்த்து குளிக்கவும் இல்லையேல் சூட்டில் முடி கொட்டிவிடும்.

சென்ற பகுதிகளின் தொடர்ச்சியாக ஒரு வாரத்திற்கு தேவையான உடற்பயிற்சியை கொடுத்திருக்கின்றேன் கவனமாக படித்து மற்றவர்களையும் கேட்டு தெரிந்துகொண்டு செய்யவும் 5 வருடங்கள் அனுபவம் பெற்று மற்றும் பாடிபில்டிங் புத்தகத்தில் வெளிவரும் பயிற்சிகளைத்தான் கொடுத்துள்ளேன்.  எல்லாவற்றுக்கும் மேல் தன்னம்பிக்கை வேண்டும் சும்மா ஒரு வாரம் செஞ்சுட்டு எனக்கு ஒன்றும் வராது என்று போயிட்டால் அவ்ளோதான் நிதானமாக 12 வாரங்கள் செய்யவும் கொடுத்துள்ள உணவைப் பயன்படுத்தவும். வெற்றி நிச்சயம்

உடலை தயார்படுத்திவிடுங்கள் உங்கள் விருப்பப்படி அனைத்தும் நடக்கும். உடல் ஏறிவிட்டது என்று  அகங்காரம் வேண்டாம்.  அழகுத்தோற்றத்திற்கு மட்டுமே உடற்பயிற்சி அனைத்தும் மற்றவர்களை துன்புறுத்தவோ பயமுறுத்தவோ அல்ல மேலும் அந்த உடல் துப்பாக்கி குண்டுக்கோ அரிவாள் முன்னாடியோ தோற்றுப்போயிடும். அதனால் அன்பு பாசம் கலந்து இருங்கள்.. இன்னும் நிறைய உடற்பயிற்சிகளுடன் மீண்டும் சந்திக்கின்றேன்… இப்படிக்கு உங்கள் IndiaBeeps  (http://www.tamil.indiabeeps.com/)நன்றி

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.