ஜிம்முக்கு போகப்போறீங்களா இதைப்படிங்க முதலில் பகுதி-3

download (69)

அடுத்ததாக செவ்வாய் மற்றும் வெள்ளிக்கான உடற்பயிற்சிகள்

இந்த இரண்டு நாட்களில்  பெரியதசை விங்க்ஸ் எனப்படும் அல்லைப்பகுதி மற்றும் முதுகுப்பகுதிக்கும் சிறியதசை பைசெப்ஸ் மற்றும் டெல்டாய்ட்ஸ் எனப்படும் தோள் பந்துகிண்ண மூட்டுக்கும் தான்.

1. புல்அப்ஸ்     – 3 செட்

download (68)

2. பேக் புல் அப்ஸ் – 3 செட்

images (57)

3. பார்பெல் ரெயிஸ் ஒவர் ஹெட் – 3 செட்

fr1

4. டம்பெல் பைசப் கர்ல் – 3 செட்

download (70)

புல் அப்ஸ் என்பது பெரிய கம்பியை பிடித்து தொங்கிக் கொண்டே உடலை மேலும் கீழும் உயர்த்தி தாழ்த்துவது.  இதனால் விலா எழும்புகள் நன்றாக வரிவடையும் அல்லைப்பகுதியில் தசை வளரும் இது உடலுக்கு V  வடிவத்தை கொடுக்கும்.

பேக் புல் அப்ஸ் என்பது இப்போது தொங்கியவாறே அப்படியே திரும்பி பின்பக்கமாக முதுகுப்பகுதியை மேலும் கீழும் ஏற்றி இறக்கவேண்டும் இதனால் முதுகு கிலோ மீட்டர் கணக்கில் விரியும்.

பார்பெல் ரெயிஸ் ஒவர் ஹெட் என்பது வெற்று ராடு அல்லது குறைந்த எடையுள்ள ராடினை இரண்டு கைகளாலும் பிடித்து எடுத்துக்கொண்டு தலைக்கு மேலேயும் கீழேயும் உயர்த்தி தாழ்த்தி இறக்கவேண்டும்.   இது தோள்பட்டைக்கு நல்ல பலனைக் கொடுக்கக்கூடியது.  இதனால் தோள் வளர்ச்சி பெறும். பந்துப்போன்ற தோள் உருவாகும்.

டம்பெல் பைசப் கர்ல் என்பது டம்பெல் எடுத்துக்கொண்டு டம்பெலைப் பிடித்து பைசப்க்கு பயிற்சி அளிப்பது தான் இது தான் பைசப்பின் ஆரம்ப பயிற்சி…

படிப்படியாக வரிசையாக இதை செய்ய வேண்டும்.  ஒவ்வொரு செட்டிலும் எடையை கூட்ட பயிற்சி பெற்றிருக்க  வேண்டும்.

இவ்வாறாக தொடர்ந்து 12 வாரங்கள் தவறாமல் செய்து வரும்போது. விங்க்ஸ் நீங்க நடந்து போகும்போது உங்கள் கைகளில் உரசுவதை உணர முடியும்.

போர் ஆம்ஸ் முடித்திட்டு வீட்டுக்கு வரவும்.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.