ஜிம்முக்கு போகப்போறீங்களா இதைப்படிங்க முதலில் பகுதி-1

images (55)

வாழ்க்கையில் வேலைப்பளு இருந்துகொண்டே இருக்கும் ஆனால் மனதுக்கும் உடலுக்கும் சிறிது ரிலாக்ஸ் தேவைப்படுகின்றது.   அந்த ரிலாக்ஸ் கொடுப்பதால் மனமும் உடலும் மீண்டும் புத்துணர்வுடன் செயல்படுகின்றது.  இந்தக் காரணங்களால் ரிலாக்ஸை தேடி ஒவ்வொருவரும் ஒரு விதத்தை கையாளுகின்றனர்.  சிலர் சுற்றுலா செல்கின்றனர் சிலர் தியானம் யோகா மற்றும் குடும்பத்துடன் வெளியே சென்று வருதல் போன்றவை. சிலருக்கு உடற்பயிற்சியின் மீது அலாதி பிரியம் இருக்கும்.

அவர்களுக்கான பதிவு  இது…. உடற்பயிற்சி துவங்க குறைந்தது 16 வயது தாண்டியிருத்தல் நலம் தான் அதற்கு முன்னாலும் உடற்பயிற்சி செய்யலாம் ஆனால் அதிக எடை கொண்டு பயிற்சி செய்யும் போது வளரும் எலும்புகள் பாதிக்கப்பட்டு வளர்ச்சி தடைபடும்.  ஒட்டப்பயிற்சி மென்மையான உடற்பயிற்சிகள் செய்யலாம்….. ஜிம்முக்கு போகுமுன்பு இதைப்படித்துவிட்டு செல்லுங்கள்….

உடற்பயிற்சிகள் தசையை விரிவடையச்செய்கின்றது.  பின் எலும்பு அந்த தசையை தாங்கும் அளவுக்கு வலிமை பெறுகின்றது.  அந்த செயல் மீண்டும் மீண்டும் நடக்க உடலில் வலிமை அதிகரிக்கின்றது. இது தான் பாடிபில்டிங்கின் முதற் கோட்பாடே….நம் முன்னோர்கள் எந்த ஜிம்முக்கு போனார்கள் அவர்கள் ஏற்றம் இறைப்பதும் மண்வெட்டியில் வாய்க்கால் போடுவதும் தான் பெரிய உடற்பயிற்சி…ஆனால் நாம் இதையெல்லாம் இப்போது நினைக்க கூட முடியாது…..சரி ஜிம்முக்கு போகலாம்…..download (62)

முதலில் சரியான ஜிம்மை தேர்ந்தெடுங்கள் அங்கே மாஸ்டர்கள் இருப்பார்கள் அப்படி இல்லாத ஜிம் என்றால் நீங்கள் உங்கள் சீனியரை தயங்காமல் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்…..

பொதுவாக காலைநேரம் தான் உடற்பயிற்சிக்கு ஏற்றது…. ஜிம்முக்கு போகுமுன்பு காலையில் பால் அல்லது ஒரு சொம்பு நீராகரம் மட்டும் குடிக்கவும்… ஏனென்றால் உடற்பயிற்சிகள் வெப்பத்தை தரும் அப்போது உடலில் இருந்து டேமை திறந்து விட்டது போல வியர்வை வெளியேறும் அதில் குளுக்கோஸ் வெளிவந்துவிடும்.. காலையில் வெறும் வயிற்றில் இருப்பதால் மயக்கம் வரும் உடற்பயிற்சியை முழு ஈடுபாட்டோடு செய்ய முடியாது. அதனால் கண்டிப்பாக நீராகரம் அல்லது தண்ணீரை குடித்துவிட்டு மறக்காமல் வாட்டர் கேனில் தண்ணீர் எடுத்துச்செல்லவும்.  கூட பெரிய டவலை எடுத்துச்செல்லவும்…அது மிக முக்கியமானது பின்வருனவற்றில் சொல்கின்றேன்.

உடற்பயிற்சியால் ஏற்படும் நன்மைகள்

1. தினமும் தவறாமல் சரியான உடற்பயிற்சி செய்வதால் உடல் வலிமை பெறும்.

2. உடற்பயிற்சி செய்து இரத்தக்குழாய்களை விரிவடையச்செய்வதால் இதய நோய்கள் ஏற்படாது.

3. ஆண்மை மிக்க  அழகு தோற்றம் மற்றும் இளமையுடன் நீடித்து வாழலாம்.

4. பாடிபில்டிங்கில் உள்ள ஆர்வத்தால் மற்ற தீயப்பழக்கங்கள் எதிலும் மனம் நாடாது.

5. எந்த ஆடையும் கச்சிதமாக பொருந்தும்.

6. தன்னம்பிக்கை பிறக்கும்.

மாலை நேரம் பொதுவாக கல்லூரி மாணவர்கள் செல்வார்கள்.  இதில் கவனிக்க வேண்டியது. மதிய உணவு சாப்பிட்ட 4 மணி நேரமாவது ஆக வேண்டும் அதன்பின்னர் உடற்பயிற்சி செய்யலாம். ஏனென்றால் செரிமானமாகாத உணவு மீண்டும் இரைப்பையில் இருந்து தலைகீழ் உடற்பயிற்சியின் போது வாய்க்கு வரும். அசிடிட்டி உண்டாகும் இதனால் தான் மாலை நேரம் உடற்பயிற்சி கொஞ்சம் கடினமானதாக இருக்கும்.  ஈடுபாடும் குறைவாக தோன்றும்…

சரி இப்போது உடற்பயிற்சி மூன்றுகட்டமாக பார்க்கலாம்…என்ன கட்டம் என்கின்றீர்களா அதை சொல்கின்றேன்…முதலில் ஒருவர் இதுவரையில் நான் கையால் தண்டால் கூட எடுத்ததில்லை அ கூட ஜிம்மில் தெரியாது என்பவர் ”பிகைனர்”.   இவர் கவனிக்க வேண்டியது…முதல் மாதம் முழுவதும் உடலை வளைத்து நெளித்து ஜிம்மின் உடற்பயிற்சி செய்ய ஏதுவாக உடலை மாற்றிக்கொள்ள வேண்டும்.  சில ஜிம் களில் டிரட்மில் (ஓடுதளம்) இருக்கும் எளிதாக ஒடிவிடலாம்.எந்த கவலையும் இருக்காது…  பல ஜிம் களில் அந்த வசதி கிடையாது சளிக்காமல் ஸ்கிப்பிங்கயிறு மற்றும் ஃபிங்கர் கிரிப் இரண்டையும் வாங்கிக்கொள்ளுங்கள்…

download (61)

இதைத்தான் போர் ஆம்ஸ் என்று சொல்வார்கள்

images (56)

Finger grip

முதல் மாதம் ஜிம்முக்கு போனவுடன் சிறிது தண்ணீரை பருகிவிட்டு சிறிது கையை காலை உதறிவிட்டு கையை மேலே கீழே உயர்த்தி தாழ்த்தி இறக்குங்கள் 10 நிமிடம் இதைப்போல் செய்தபின் இடுப்பின் மேல் உடலை வலப்பக்கம் மற்றும் இடப்பக்கம் திருப்புங்கள் இதைப்போல 5 நிமிடம் செய்யுங்கள் இப்போது உடற்பயிற்சி தயாராக  உடலில் உள்ள அனைத்து இடங்களிலும் நெட்டி விழுந்திருக்கும்…இப்போது ஸ்கிப்பிங் எடுத்து ஆட ஆரம்பியுங்கள் முதலில் கால் தடுக்கும் சளைக்காமல் எதிர்கொள்ளுங்கள் ஒரு வாரத்தில் ஸ்கிப்பிங்கை பழகிவிடுவீர்கள்.. ஒடுவதை விட ஸ்கிப்பிங் மிக்க பலன் தரும் கால், தொடை, பாதம், வயிறு, மார்பு, தலை….என அனைத்து இடங்களுக்கும் பலன் தரும்.   என்ன தான் உடல் இளைத்தாலும் சிலவர்களுக்கு தலை அப்படியே தான் இருக்கும். அப்படியுள்ளவர்கள் ஸ்கிப்பிங் ஆடும்போது முழுவதும் இளைத்துவிடுவார்கள்.

இப்போது ஸ்கிப்பிங்கை 3 செட் ஒரு மாதம் செய்ய வேண்டும். ஒரு செட் பல ரெப்கள் சேர்ந்தது. ரெப் என்பது ஒரு முறை ஸ்கிப்பிங் தாண்டுவது.

ஜிம்மைவிட்டு வரும் 10 நிமிடத்திற்கு முன் போர்ஆம்ஸ் போட வேண்டும்.. இது கெண்டைக்கைக்கு பலம் தரக்கூடியது… போர் ஆம்ஸ் போடுவது எப்படி யென்று கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் சில ஜிம்களில் மிஷின்கள் இருக்கும்.. இல்லையெனில் கவலைப்படாமல் வாங்கி வந்த ஃபிங்கர் கிரிப்பை எடுத்து அழுத்துங்கள் முதலில் கடினமாக இருக்கும் அப்பறம் சரியாகிவிடும்.. இதை இரண்டு கைகளிலும் மாற்றி மாற்றி ஆறு செட் (ஒரு கைக்கு மூன்று) செய்ய வேண்டும். நான் சொன்னபடி செய்தீரானால் சரியாக மூன்று மாதத்தில் யாராவது கைக்குலுக்க உங்களிடம் கையைக்கொடுத்தால் சாறுபிழிந்து விடுவீர்கள்…நிச்சயம்.  துண்டை எடுத்துக்கொண்டு நன்றாக உடலை துடைத்துவிடுங்கள் 5 நிமிடம் உட்கார்ந்துவிட்டு யாரிடமும் தேவையற்ற பேச்சுக்கள் இல்லாமல் குட் பை சொல்லிவிட்டு காலார நடந்து வாருங்கள் அல்லது சைக்கிளை மிதித்து வீட்டுக்கு வாருங்கள்.

இது போல் தொடர்ந்து ஒரு மாதம் ஸ்கிப்பிங் மற்றும் போர் ஆம்ஸ் செய்யும் போது உடல் பயிற்சிக்கு உடல் தயாராகிவிடும்…

இப்போது அடுத்தக்கட்டம்…..

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.