கற்ப மூலிகை கருந்துளசியின் பயன்கள்

235915020_f8c471afbc

கற்ப மூலிகைகள் சில உள்ளன.  இது கரு என்ற பேரில் தொடங்கும்.  கருவேப்பிலை, கருஞ்சீரகம், கருநொச்சி, கருந்துளசி. ஆகியவகைகள் உள்ளன.  இந்த வகை மூலிகைகள் மிகுந்த நற்குணங்கள் உடையவை கருந்துளசி அதில் முக்கியமானது.

தமிழ்நாட்டில் பெரும்பாலும் வீடுகளில் துளசி மாடம் வைத்திருப்பார்கள் அதில் சாதரண துளசிசெடி இருக்கும்.  ஆனால் கருந்துளசி என்பது கருப்பும் சிகப்பும் கலந்த தண்டுகளையும் இலைகளையும் உடைய தாவரம்.

இந்தக்கருந்துளசியினால் ஏற்படும் நன்மைகள் பார்ப்போம்.

1. கருந்துளசி காரம் சிறிது  இருக்கும் ஆனால் சிறிது மிளகுடன் 10 துளசியிலைகளை பறித்து மென்று விழுங்கினால் தொண்டையில் உள்ள சளி முற்றிலுமாக நீங்கிவிடும்.

2. காலையில் எழுந்தவுடன் பல்லைக் கொப்பளித்துவிட்டு 5  இலைகளை உட்கொண்டால் மலச்சிக்கல் மற்றும் வயிற்று உபாதைகள் நீங்கிவிடும்.

3. வாய் துர்நாற்றத்தைப் போக்க கருந்துளசி இலைகளை பறித்து வாயில் (பபிள்கம் பதிலாக) மென்றால் பற்களில் உள்ள கிருமிகள் அழிந்துவிடும் வாயும் துளசி மணம் கமழும்.

4. ஒரு செடி வைத்து வளர்த்தால் அதன் விதைப்பட்டு பல செடிகள் அதன் அருகே வந்துவிடும். வறட்சியை தாங்கக்கூடியது. அதில் வேதிப்பொருட்கள் நிறைய இருக்கின்றது.

5. இரவில் செம்பு (அ) பஞ்ச உலோகப்பாத்திரத்தில் 10 துளசி இலைகளை நசுக்கி போட்டு அதில் அரை டம்ளர் தண்ணீர் கலந்து விடவும். பின் காலையில் வெறும் வயிற்றில் பல்லைக் கொப்பளித்துவிட்டு அந்த தண்ணீரினைப்பருக வேண்டும்.  உடலில் உள்ள அனைத்து தாதுப்பிரச்சினைகளும் தீர்ந்துவிடும்.  தேகம் மிளிரும். புற்றுநோய்க்கூட உடனே கரைந்து போய்விடும்.

6. கண்புரை ஏற்பட்டாலும் சரிசெய்துவிடும்.

7. கருந்துளசியானது சுற்றுப்புறச்சூழலுக்கு மிகுந்த நண்பனாக இருக்கின்றது. ஒசோன் படலத்தில் உள்ள பாதிப்பை சரிசெய்கின்றது. அச்செடியில் பட்டு வரும் காற்றினை சுவாசிக்க நம் மனநோய்கள் கூட சரியாகிவிடும்.

தினமும் கருந்துளசியை தவறாமல் எடுத்து வந்தால் 48 நாட்களில் சளி, மற்றும் கபநோய்களிடம் இருந்து உடலை காத்துக்கொள்ளலாம்.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.