டெங்கு காய்ச்சலுக்கு சித்த மருத்துவம்தான் ஒரே தீர்வு

download (60)
images (53)

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்

டெங்கு காய்ச்சல் என்பது நன்னீர் குட்டைகளில் உற்பத்தியாகும் கொசுவின் கடியால் தான் ஏற்படுகின்றது.  நவீன மருந்துகள் எவ்வளவு இருந்தும் இந்த டெங்குவின் தாக்கத்தை குறைக்க முடியவில்லை.  சிக்கன் குன்யா என்ற காய்ச்சல் வந்தால் எப்படி கை கால்கள் வலியால் துடிக்குமோ அதைவிட அதிகமாக டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் வேதனை அனுபவித்துதான் ஆகவேண்டும் என்ற கட்டாயம்.

images (54)

டெங்குவால் பாதிக்கப்பட்ட குழந்தையின் அருகில் தாயார்

மாத்திரை மருந்துகள் எடுத்துக்கொண்டு காய்ச்சலை ஒரளவு குறைத்தாலும் அதன் அனதிரி ஒரு வாரத்திற்கு இருக்கின்றது.  தலை பாரமாக எந்த வேலையையும் செய்ய விடாது.  அதே சமயம் வயிற்றுப்போக்கும் ஏற்பட்டு விடும்.  ஒவ்வொரு மனித உடலுக்கு ஏற்ப பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது.  குழந்தைகள் நிறைய பேர் டெங்குவின் தாக்கத்தை தாங்க மாட்டார்கள். இவ்வளவுக்கும் டெங்கு கொசு சாக்கடையில் வளருவதில்லை நல்ல தெளிவான நீரில் தான் முட்டையிட்டு உருவாகின்றன இதில் மனிதனின் தவறு ஒன்றும் கிடையாது.

உருவான டெங்கு கொசுவின் கடியால் தான் டெங்கு கிருமி காய்ச்சலை ஏற்படுத்தி தலைவலி, வயிற்றுப்போக்கு, முதுகுவலி என்று கடைசியில் காய்ச்சலில் படுக்கவைத்துவிடும்.

images (52)

நிலவேம்பு செடியும், டெங்குவும்

இந்த டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு நிறைய பேர் உள்ளனர்.  நவீன மருந்துகள் நிறைய கொடுத்து கொடுத்து தோல்வியைத்தான் தழுவுகின்றனர். அந்தக்காய்ச்சலின் தாக்கம் 2 வாரங்கள் தான் இருக்கும்.  அது வரை உடல் அதை தாங்க வேண்டும். எனவே டெங்கு தாக்கியவுடன் உடலுக்கு வலுவான உணவினை அதிகமாக கொடுக்க வேண்டும். உவட்டிக்கொண்டு வந்தாலும் சாப்பிடத்தான் வேண்டும். டெங்கு போய்விடும்.  மாத்திரை மருந்து  எடுத்துக்கொண்டாலும் 2 வாரங்கள் ஆகும்.

ஆனால் சித்த மருத்துவத்தில் டெங்கு என்ற நோய்க்கு மருந்து உள்ளது.  ”விஷக்காய்ச்சல் எதுவாகினும் சிறிது நிலவேம்பினை கரைத்து குடிக்க”  நிலவேம்பு என்பது ஒரு தாவரம் அதன் சாற்றை எடுத்து வெந்நீர் அல்லது தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும் வேம்பைவிட கசப்பு அதிகம் ஆனால் சிறிது பனைவெல்லத்தை கடித்துக்கொண்டு பருகித்தான் ஆக வேண்டும்.  காய்ச்சல் ஒருவருக்கு வந்தது என்று தெரிந்தால் அந்த குடும்பத்தில் உள்ள அனைவரும் பருகவேண்டும். டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் எவ்வளவு ஜூரம் அடித்தாலும் 4 வேளை கசாயத்தைக் குடிக்க வேண்டும்.  அதிகம் முன்று நாட்களில் டெங்கு காய்ச்சலின் வைரஸ் கொல்லப்பட்டு உடல் பழைய நிலைக்கு திரும்பிவிடும்.

download (59)

நிலவேம்பு செடியின் தோற்றம்

குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்,  சங்கடையில் சிறிது தேன் மட்டும் கலந்து குடிக்க வைக்கவும்.  குழந்தைகளை முடிந்த வரையில் கொசுவிடம் பாதுகாப்பாக கொசு வலையில் வைத்து பராமரிக்கவும்.

அரசு மருத்துவமனைகளிலேயே இப்போது நிலவேம்பு கசாயம் தருகின்றார்கள். நல்ல மனம் உள்ளவர்கள் குடிநீர் பந்தல் அமைப்பது போல நிலவேம்பு கசாயம் தயாரித்து இலவசமாக அனைவருக்கும் தருகின்றார்கள்.

நிலவேம்பு நகர்ப்பகுதியில் கிடைக்காது ஆனால் சித்த மருத்துவ கடைகளில் நிலவேம்பு பொடியாக விற்கப்படுகின்றது. அதை வாங்கி வெந்நீர் ஒரு சொம்பு கொதிக்க வைத்து அதில் ஒரே ஒரு தேக்கரண்டி மற்றும் பொடியைப் போட்டு நன்றாக ஆற்றிவிட்டு நான்கு டம்ளர்களில் ஊற்றி குடிக்கவும். பெரும்பாலும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்கும் போது வயிறும் சேர்ந்து சுத்தமாகின்றது.  காய்ச்சல் வந்த பிறகு கவலைப்படுவதை விட அதை வருமுன் காப்பதுதான் சிறந்தது.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.