பாலியல் கொடுமைக்கு தண்டனை ஆண்மை அகற்றல்!

download (57)

பாலியல் வன்கொடுமைகள் சிறார்கள் மற்றம் சிறுமிகளுக்கு நடந்த வண்ணம் உள்ளன.  எவ்வளவு தான் தண்டைனை கொடுத்தாலும் பயப்படாமல் தவறு செய்து விடுகின்றனர். இதனால் மிகுந்த வேதனையில் இந்திய அரசாங்கம் உள்ளது.

கடந்த 2011 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டைச்சேர்ந்த ஒருவர் காப்பகத்தில் இருந்து ஒரு 15 வயது மாணவனை தத்தெடுத்து தான் படித்து வைப்பதாக கூறி தாயாரின் அனுமதியுடன் டெல்லிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமைகள் கொடுத்துவிட்டு அவனை விட்டுவிட்டு சென்றுவிட்டார்.   இதனால் மிகுந்த இன்னலுக்கு ஆளான சிறுவன் பின்னர் மீண்டும் காப்பகத்திற்கு வந்து நடந்ததைக் கூறினான்.  இதனால் அவர் மீது  புகார் அளித்து அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துவிட்டார்கள்.

இதனால் அவரால் இந்தியா வர இயலவில்லை.  இதனால் அந்த ஆசாமி தன் மீது போடப்பட்டுள்ள வழக்கு மற்றும் தேடப்படும் குற்றவாளி என்பதையும் விலக்கவேண்டும் என்றும் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இதனை விசாரித்த திரு. கிருபாகரன் நீதிபதி அவர்கள் பின்வருமாறு தெரிவித்தார். நாட்டில் பாலியல் குற்றங்கள் அதிகரித்துவிட்டது.  இவ்வாறு பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு தண்டனையோடு சேர்த்து ஆண்மை நீக்கமும் செய்துவிடவேண்டும்.  இந்த தண்டைனை காட்டு மிராண்டி தனமானது.  மனித இனத்திற்கு கேடானது.  கற்கால மனித வாழ்க்கையைப் போன்றது. என்று சிலர் போர்க்கொடி தூக்குவார்கள் என்று எனக்கு தெரியும் ஆனால் காட்டு மிராண்டி தனமான குற்றத்திற்கு அதே போல் தண்டைனையும் காட்டுமிராண்டி தனமாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்த வழக்கில் சிறுவனை துன்புறுத்தியது உண்மை அந்த சிறுவனே  வாக்குமூலம் கொடுத்துள்ளான். இதனால் குற்றம் செய்தது நிருபனமாகியுள்ளது புகாரை அழிக்கமுடியாது.  ஆனால் காவல் நிலையத்தில் ஆஜரானால் தேடப்படும் குற்றவாளி என்பதை நீக்கமுடியும் என்று தீர்ப்பளித்துள்ளார்.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.