பீகார் தேர்தலில் லஞ்சம் வாங்கும் வீடியோ வெளியீடு

Nitish-Kumar

பீகார் தேர்தலில் இப்போது மூன்றாம் கட்டத்தேர்தல் நடந்து வருகின்றது.  தற்போது பீகாரில் ஆட்சிசெய்து வரும் ஐக்கிய ஜனதா தளம் தான் பல சிக்கல்களில் மாட்டிவிடுகின்றது.  இப்போது தான் முதலமைச்சர் நிதீஷ்குமார் மந்திரவாதியை சந்தித்து தன்னை தவிர வேறு யாரும் ஆட்சியைப்பிடிக்கக்கூடாது என்று கேட்டுக்கொண்ட வீடியோவால் பரப்பு ஏற்பட்டது.  ஆனால் அதற்குள் அந்தக்கட்சியின் எம்.எல்.ஏ ஒருவர் லஞ்சம் பெறும் வீடியோ ஊடகங்களில் பரவி வருகின்றது.

இதற்கு முன் பீகாரின் சுங்க வரித்துறை அமைச்சர் அவ்தேஷ் குஷ்வாஹா ஒரு வியாபாரிபோன்ற ஒருவரிடம் இருந்து ரூ. 4 லட்சம் பெற்றதாக ஒரு வீடியோ வெளியானது.  அந்த வீடியோ மிகுந்த சர்ச்சையை உருவாக்கியது இதனால் பதவியை அவர் ராஜினாமா செய்து விட்டார். இருந்தாலும் வீடியோவின் தாக்கம் குறையவில்லை.

அதையும் தொடர்ந்து சத்யதேவ் என்ற பீகாரின் எம்.எல்.ஏ அவர் ரூ. 2 லட்சம் பணத்தை ஒருவரிடம் இருந்து வாங்கிக்கொண்டு நாங்கள் மறுபடியும் ஆட்சிக்கு வந்தால் இன்னும் நிறைய பணம் தர வேண்டும் என்று கூறுகின்றார்.  இதை ரகசியமாக வீடியோ எடுத்து வலையில் விட்டுவிட்டனர். அது நாடு முழுவதும் பரவி விட்டது.

இது போன்ற பல்வேறு வீடியோக்களால் ஐக்கிய ஜனதா தளம் ஒரம் கட்டப்படுகின்றது. மக்கள் மனதில் தேர்தல் நேரத்தில் கசியும் வீடியோக்களால் ஐக்கிய ஜனதா தளம் ஆட்டம் கண்டுவிட்டது.

 

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.