நார்வேயில் நகரில் துணை மேயராக தமிழ்பெண் தேர்வு

2451327

இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் நார்வேயில் உள்ள ஆஸ்லே என்ற நகருக்கு துணைமேயராக பதவி ஏற்றுள்ளார். ஐரோப்பா கண்டத்தில் நார்வே நாடு ஒன்றாகும். அதில் கடந்த மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது அதில் துணை முதல்வர் பதவிக்கு தொழிலாளர் கட்சியின் சார்பில் குணரத்னா வேட்பாளராக நின்று வெற்றி பெற்றுள்ளார்.

இவரது முழுப்பெயர் கம்சாயிணி குணரத்னம்(27) ஈழத்தமிழ்ப்பெண்ணான இவர் தனது மூன்று வயதில் இலங்கையில் ஏற்பட்ட போரின்போது  தப்பித்து அகதியாக ஐரோப்பா சென்றுள்ளார். அங்கு சென்று பிழைத்து, இளைஞர் அணித்தலைவராக இருந்திருக்கின்றார். பின்னர் உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிட்டு ஜெயித்தும் விட்டார்.

ஈழத்தமிழர் ஒருவர் ஐரோப்பாவில் ஒரு நகரில் துணைமேயராக பதவியேற்றிருப்பது மிகுந்த பாராட்டுக்குறியது மட்டுமல்லாமல் தமிழர்களுக்கு பெருமையும் தரக்கூடியது.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.