இரண்டு லட்சத்துக்காக தோழியே பெண்ணைக் கடத்தினார்

201510240131380334_2-lakh-to-request-recovery-of-the-kidnapped-officers_SECVPF

ரூபாய் 5 லட்சம் கேட்டு ஒய்வு வருவாய்த்துறை ஆய்வாளரின் மகளைக் கடத்திய கும்பலிடம் இருந்து காவல்துறையினர் மீட்டனர்.  உடந்தையாக இருந்த அவரது தோழி மற்றும் தோழியின் காதலனைக் கைது செய்தனர்.

சென்னையில் அம்பத்தூர்ப்பகுதியில் உள்ள கொரட்டூர், சுப்புலட்சுமி நகரில் ரவீந்திரன் என்ற ஓய்வு பெற்ற வருவாய்த்துறை அதிகாரி, மற்றும் அவருடைய மகள் பானுப்பிரியா திருமணமாகாத இவர் தனது தந்தையாருடன் வசித்து வருகின்றார்.  இதய நோயாளியான இவர் சமீப காலமாக சிகிச்சைபெற்று வருகின்றார்.

இவருக்கு தோழியாக ஆவடியின் மோரை கிராமத்தில் உள்ள பிரேமா என்பவர் பழகி வந்துள்ளார். பானுப்பிரியா எங்காவது வெளியே சென்றால் பிரேமாவை அழைத்துக்கொண்டு தான் செல்வார். அதேபோல் கடந்த 21 ஆம் தேதி பானுவும் பிரேமாவும் சென்னையில் உள்ள ஒரு திரையரங்கத்தில் படம் பார்க்க சென்றனர்.

சினிமா முடிந்தவுடன் சென்னையில் உள்ள மின்சார ரயில் போக்குவரத்து வழியாக பிரேமாவை விட்டு வர பானு ஆவடி சென்றுள்ளார். ஆவடியில் இறங்கியவுடன் பிரேமா ஒரு காரில் ஏறிக்கொண்டு வா என்னுடன் எனக்கு தெரிந்தவர்கள் தான் உன்னையும் உன் வீட்டில் இறக்கிவிட்டு விடுவோம் என்றார். பானு சிறிது தயங்கினாலும் தோழிக்காக ஏறினார். ஆனால் அவர்கள் திடீரென்று பானுவின் வாயைப்பொற்றினர். உடனே பானுவை மோரை கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் அடைத்தனர்.

பின் பானுவின் தந்தை ரவீந்திரனுக்கு போன் செய்து மகள் கடத்தப்பட்டதாக கூறி ரூபாய் 5 லட்சம் தந்தால் விட்டுவிடுகின்றோம் என்று கூறியுள்ளனர். ரவீந்திரன் அதிர்ச்சிக்குள்ளாகி ”என் மகள் இதய நோயாளி அவளைவிட்டு விடுங்கள் என்னிடம் 5 லட்சம் இல்லை” என்று கூறியுள்ளார். இதனால் 2 லட்சம் வரை குறைத்து. ரூபாய் 2 லட்சத்துடன் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வருமாறு கூறியுள்ளனர்.

யாரிடம் எதையும் கூறாமல் ரூபாய் இரண்டு லட்சத்துடன் ரவீந்திரன் பேருந்து நிலையத்தில் காத்திருந்திருக்கின்றார்.  பணத்தை வாங்க யாரும் வரவில்லை அதே சமயம் போனும் வரவில்லை இதனால் வெகு நேரம் காத்திருக்க வேண்டிய நிலைமையில் அங்கு காவலில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவர் கேட்க அவரிடம் கதறி அழுதிருக்கின்றார்.

உடனடியாக தனிப்படை அமைத்து பானுவின் தோழியான பிரேமாவை பிடித்து விசாரிக்கையில் அவர் காதலனுடன் சேர்ந்து பானுவை பணத்திற்காக கடத்தியதை ஒப்புக்கொண்டார்.  பானுவை மீட்டுவிட்டு பிரேமா மற்றும் அவரது காதலன் கார்த்திக் இருவரையும் கைது செய்தனர். மேலும் இந்த கடத்தலில் உடந்தையாக இருந்தவர்களை தேடி வருகின்றனர்.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.