திருச்சியில் 5 மாடிக்கட்டிடம் இடிந்து ஒருவர் பலி

07085cbd-6c4f-411f-884b-ed4b97dd0f76_S_secvpf

திருச்சியில் திருச்சி மதுரை சாலைக்கு அருகில் உள்ள நத்தர்ஷா பள்ளிவாசல் அருகேயுள்ள பழைய ஐந்து மாடிக்கட்டிடம் இடிந்து ஒருவர் பலியானார்.

தர்காவுக்கு செல்லும் பாதையில் பழமைவாய்ந்த வீடுகள் நிறைய உள்ளன.  அதில் ஒரு வீடு கடந்த நாற்பது வருடங்களுக்கு முன்  கட்டப்பட்டது  இப்போது அந்தக்கட்டிடத்தை முழுமையாக இடிக்காமல் புதுப்பித்து அதில் மேலும் 3 மாடி கட்டப்பட்டது.  இந்த நிலையில் ”கிளாத் மெர்ச்சன்ட்” ஜலாலுதீன் என்பவர் விலைக்கு வாங்கினார்.

இரண்டாவது மாடியில் பஷீரின் குடும்பமும் மூன்றாவது மாடியில் அன்வர் ஷெரீப்பின் குடும்பமும் வசித்து வந்திருக்கின்றது. மற்ற மாடிகளில் மராமத்துப்பணிகள் நடைபெற்றுவந்தது. அந்த வீட்டின் கீழ் தளத்தில் ஆழ்துளைக்கிணறு ஒன்று தோண்டப்பட்டுள்ளது.  அந்த அதிர்வால் வீட்டின் பல பகுதிகளில் விரிசல் ஒடிப்போயிருக்கின்றது.

நேற்றிரவு 8 மணிவாக்கில் கட்டிடம் கட கட வென்று இடிந்து விழுந்து விட்டது.  இதனைக் நேரடியாக கண்ட மக்கள் அதிர்ச்சியடைந்தனர். அதில் பஷீர் பரிதாபமாக சிக்குண்டு இறந்து போனார் தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் இறங்கி கட்டிடத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்றினார்கள். அமைச்சர் மற்றும் கவுன்சிலர் நத்தர்ஷா மீட்புப்பணியை பார்வையிட்டனர்.

பழைய மாடியில் அனுமதிபெறாமல் 5 மாடி கட்டியதாலும் கட்டிடத்திற்கு போதுமான அனுமதி பெறாவிட்டதாலும் கட்டிட உரிமையாளர் ஜலாலுதீன் மீது வழக்குப்பதிந்து கைது செய்துள்ளனர். நாளை கோர்ட்டில் ஒப்படை செய்து  சிறையில் அடைக்கப்படுவார்.

 

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.