அரைகிலோ எடையில் பிறந்த அதிசயக்குழந்தை

imagesbaby

இங்கிலாந்தில் ஏழே மாதத்தில் வெறும் அரைகிலோ எடையுள்ள குழந்தை பிறந்துள்ளது.  அதிர்ஷ்ட வசமாக அந்தக்குழந்தையை மருத்துவர்கள் காப்பாற்றிவிட்டார்கள். லண்டனில் சரண்க்ரன்ட் என்ற பெண் கருவுற்றிருந்தார். மாதா மாதம் கருவை மருத்துவர்கள் சோதித்துக் கொண்டு இருந்தனர். ஏழாவது மாதம் சோதித்துப்பார்க்கையில் கருவில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சி குன்றியுள்ளது தெரியவந்தது.

இதனால் மருத்துவர்கள் குழந்தையை அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுத்துவிடலாம் என்று ஆலோசித்து குழந்தையை பிறக்க வைத்தனர். ஆனால் ஏழு மாத பெண் குழந்தை சரியாக வளர்ச்சி பெறாறதால் அந்தக்குழந்தை வெறும் 500 கிராம் எடையே இருந்தது.  இதனால் குழந்தையை செயற்கை முறையில் வெப்பமூட்டியில் வைத்து குழந்தையின் எடையை அதிகப்படுத்தினர். இதனால் குழந்தை நன்கு வளர்ச்சி பெற்று இப்போது மூன்றரை கிலோவாக அதிகரித்துள்ளது.

இப்போது அந்தப் பெண்குழந்தையை வீட்டுக்கு எடுத்துச்செல்ல அனுமதி மருத்துவர்கள் கொடுத்துள்ளார்கள்.  மருத்துவ உலகில் இது பெரிய சாதனையாக பாரட்டப்பட்டது.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.