நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பெங்களூர் மாநகராட்சி : சொத்து வரியை உயர்த்த முடிவு

download (53)

பெங்களுர் கடந்த சில மாதங்களாக நிதிப்பற்றாக்குறையில் சிக்கி உள்ளது.  பெங்களுர் தான் இந்தியாவின் ஐடி துறையில் பல கம்பெனிகள் கொண்ட மாநகரம்.  அதே சமயம் அது டெக்சிட்டி என்று அழைக்கப்பட்டுவருகின்றது. ஆனால் கடந்த சில மாதங்களில் நிதிப்பற்றாக்குறையில் பெங்களுர் மாட்டிக்கொண்டு தவிக்கின்றது.  போது மான பருவ மழை பெய்யாத காரணத்தால் அங்கு தானிய விளைச்சலும் குறைவு இதனால் அத்தியாவசிய பொருட்கள் விலை மிக அதிகமாக ஏறிவிட்டது.

ஏற்பட்ட நெருக்கடியை சரிசெய்ய மாநகராட்சி அரசு பல திட்டங்கள் செயல்படுத்தவுள்ளது அதன்படி வணிக வரி மற்றும் சொத்து வரி ஆகியவற்றை சரியாக வசூலிக்கவேண்டும் என்றும் அதே சமயம் மோசடிகளை தவிர்க்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளது.

பெங்களுரில் கடந்த 10 வருடங்களாக சொத்துவரி உயர்த்தப்படவில்லை. இதனால் இப்போது சொத்து வரியை உயர்த்தி ஒரளவு வசூலித்தால் நிதி நெருக்கடி குறைய வாய்ப்புள்ளது. மேலும் வர்த்தகக்கட்டிடங்கள் வாடகைக் கட்டிடங்கள் வரியை அதிகப்படுத்தினால் கண்டிப்பாக நிதி நெருக்கடியை சரிசெய்யலாம்.

நாட்டின் மொத்த பொருளாதாரத்தல் பெங்களுருக்கு 10 சதவிதம் ஆனால் பெங்களுரே இப்படி நிதிப்பற்றாக்குறையில் உள்ளது என்பது சரியான ஆட்சியின்மை என்பதை குறிக்கின்றது.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.