அரியானாவில் சாதிவெறியில் கருகிய இளம்பிஞ்சுகள்

harayana-kids-burnt-to-death

ஹரியானாவில் சாதிக்கொடூரப் போராட்டத்தில் அநிநியாமாக இரண்டு குழந்தைகள் கொளுத்தப்பட்டு இறந்தனர்.

ஹரியானாவின் ஃபரிதாபாத் மாவட்டத்தின் சன்பேர் என்ற ஊரில் தலித் இனத்தைச்சேர்ந்தவர்களை பெட்ரோல் ஊற்றி மற்ற சாதியைச்சேர்ந்தவர்கள் உயிரோடு எரித்துள்ளார்கள்.

எரிந்த குழந்தைகளில் பத்துமாதமே ஆன பெண்குழந்தையும் இரண்டு வயது ஆன ஆண்குழந்தையும் ஆவார்கள். அவர்களின் தாயார் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த தலித் குடும்பத்தை ஏற்கனவே நடந்த சண்டையில் ராஜபுத்திர சாதியினர் தலித் குடும்பத்தை ஊரை விட்டு போகும் படி சொல்லியுள்ளனர். தலித் மக்கள் இதனால் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.  ஆனால்  நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. இந்நிலையில் கோபத்தில் ராஜ்புத் இனத்தவர்கள் சிலர் அந்தக்குடும்பத்தையே எரித்துள்ளனர்.

சாதிக்கொடுமையால் இளம்பிஞ்சுகள் கருகிய சம்பவத்திற்கு எதிராக அனைத்துக் கட்சிகளும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்கள். இப்போது இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைப்பதாக அரியானா முதல் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.