திருச்சியில் கோர விபத்து 10 பேர் உயிரிழப்பு

201510210140436992_Standing-near-a-truck-accident-claim-Trichy-bus-collision_SECVPF
நேற்று (20-10-2015) சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு அரசு பேருந்து புறப்பட்டு சென்றது அதில் நாகர்கோவில், திருச்சி மற்றும் கன்னியாகுமரியைச்சேர்ந்த பயணிகள் இருந்தனர். அந்தப்பேருந்து திருச்சி அருகே சமயபுரம் இருங்களுருக்கு வரும்போது அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
சாலையின் ஒரமாக நின்றுகொண்டிருந்த லாரியானது இரும்பு பிளேட்டுகளை சுமந்திருந்தது.  வேகத்தில் வந்தப் பேருந்து வேகமாக மோதியதில் அந்த இரும்பு பிளேட்டானது பேருந்தின் பக்கவாட்டில் வெட்டிக்கொண்டே வந்தது.  அதில் பக்கவாட்டில் அமைந்திருந்த பயணிகளில் 10 பேரின் உடல் பரிதாபமாக துண்டாகியது. மற்றவர்களுக்கு காயங்கள் மற்றும் உடலில் அடிபட்டுவிட்டது.
கூக்குரல் கேட்டு நெடுஞ்சாலை காவல் மற்றும் சமயபுரம் காவல்துறையாளர்கள் வந்து உயிருக்கு போராடியவர்களை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். விபத்தில் பேருந்து பலத்த பாதிப்பு அடைந்ததால் பயணிகள் அதில் சிக்கி கொண்டனர். பலர் மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளனர்.
பேருந்தைஒட்டி வந்த டிரைவர் சரியாக பார்க்காததால் தான் விபத்து ஏற்பட்டது என்று கூறுகின்றார்கள். ஆனால் விரைவுப்பேருந்து ஒட்டுநர்கள் நல்ல பயிற்சியைப் பெற்றபின்னரே பேருந்தை இயக்க அனுமதிப்பர். எனினும் இவ்வளவு பெரிய விபத்து நடந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை கொடுத்தது.  லாரி ஒட்டுநரை தேடி வருகின்றனர்.
வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.