காஷ்மீர் MLA வின் மீது கருப்பு மை அடித்து அவமானப்படுத்தப்பட்டார்

images (41)

மாட்டிறைச்சியை தடுக்கும் மதவாதக்கும்பலால் ஜம்மு காஷ்மீர் MLA ஷேக் அப்துல் ரஷீத்தின் மீது கருப்பு மை பீச்சி அடித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

உபி தாத்ரியில் மதவாதக்கும்பல் சென்ற வாரம் மாட்டிறைச்சி சாப்பிட்டதாக முகமதியர் ஒருவர் அடித்துக் கொலைசெய்தது மற்றும் அவரது குடும்பத்தையும் தாக்கியது.  இதேபோல் காஷ்மீரில் நேற்று முந்தைய தினம் டிராக்டா் டிரைவரை மாட்டிறைச்சி தின்றதாக கூறி உயிரோடு எரித்துக் கொன்றனர்.

இதனால் மாட்டிறைச்சி தடுப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் MLA ஷேக் அப்துல் ரஷீத் தனது வீட்டில் மாட்டிறைச்சி விருந்து நடத்தியுள்ளார். இதனால் மதவாதக்கும்பல் அவரைப் பழிவாங்குவதற்காக காத்திருந்தது. அவர் நேற்று கொலைசெய்யப்பட்ட டிரைவர் ஜாகீத் வீட்டிற்கு ஆறுதல் கூற வந்தபோது அவரை மதவாதக்கும்பல் சுற்றி வளைத்து கருப்பு மை ஊற்றியது. இதனால் அவரின் முகத்தில் கருப்பு மை படிந்தது. பசுவதையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறிக்கொண்டே மையை ஊற்றியுள்ளனர்.

 ஜம்மு காஷ்மீர் எம்.எல்.ஏ ஷேக் அப்துல் ரஷீத் மீது அடையாளம் தெரியாத சிலர் கருப்பு மை ஊற்றி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் MLA மிகுந்த வேதனையில் உள்ளார். அவர் தன்முகத்தை மோடியிடம் காட்டி நியாயம் கேட்பேன் என்று பத்திரிக்கையாளர்களிடம் கூறியிருக்கின்றார். மை ஊற்றிய இரண்டு பேரை போலீஸார்கள் கைது செய்துள்ளனர்.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.