சென்னை உயர்நீதி மன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் பீதி

download (41)

சென்னையில் உள்ள உயர் நீதிமன்றத்திற்கு அதிகாலையில் வந்த வெடிகுண்டு மிரட்டலால் அங்கு பரபரப்பு மற்றும் பீதி ஏற்பட்டுள்ளது. இன்று காவல்துறைக்கு அதிகாலை மூன்று மணி அளவில் வந்த போன் காலில் அடையாளம் தெரியாத மர்ம நபர் பேசியுள்ளார். அவர் உயர்நீதிமன்றத்தின் வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது என்று கூறிவிட்டு போன் காலை கட் செய்து விட்டார்.

உடனே அங்கிருந்த காவல்துறையினர் மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு கண்டுபிடிக்கும் கருவி ஆகியவற்றைக்கொண்டு சோதனை நடத்திப் பார்த்தனர். அப்போது கிடைத்தது கடிகாரமும் மற்றுமொரு கடிதமும் தான் அதில் லஞ்சம் அதிகரித்துள்ளது அதனை தடுக்க காவல்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று எழுதியிருந்தது.  போலீஸார்கள் இந்தக் கடிதம் மற்றும் போன் கால் யார் செய்திருப்பார் என்று விசாரனை மேற்கொண்டு வருகின்றார்கள்.

ஏற்கனவே வெடிகுண்டு மிரட்டல் சென்னை உயர்நீதி மன்றத்திற்கு வந்துள்ளது. இது இரண்டாவது முறையாகும்.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.