சுவீடனில் இனிமேல் பணத்தை கண்ணால் பார்க்கமுடியாது

Sweden-Cashless--415x260

இனிமேல் சுவீடனில் பணத்தைக் கண்ணால் கூட பார்க்க முடியாது.  ஏன் என்றால் அங்கே பெட்டிக்கடையில் இருந்து பெரிய ஷாப்பிங்மால் வரைக்கும் எல்லா பணவர்த்தகமும் மொபைலில் தான்.

நம் நாட்டில் இப்போது இந்த அளவுக்கு பயன்படுத்தும் ஆன்லைன் வர்த்தகம் 10 வருடங்களுக்கு முன்னரே சுவீடனில் பயன்படுத்தப்பட்டது. இப்போது அவர்கள் இன்னும் முன்னேற்றம் அடைந்து பெருமளவில் ஆன்லைன் வர்த்தகத்தை பயன்படுத்துகின்றனர்.

சுவீடனின் பணமானது சுவீடிஸ் கரோனா எனப்பெயர்.  இப்போது அதிகமாக யாரும் நேரடி பணவர்த்தகத்தை பயன்படுத்தவில்லை அதற்கு பதிலாக வங்கி பரிமாற்றம் மற்றும் ஆன்லைன் சேவை என்று எல்லாமே மின்னணு முறையாக மாறிவிட்டது.

இதனால் உலகிலேயே முதல் பணபரிமாற்றம் இல்லாத நாடு சுவீடன் ஆகும். இதனால் பணத்தை யாராலும் கொள்ளைக் கூட அடிக்கமுடியாது.  ஆனால் அதே சமயம் கணினி திருடர்(ஹேக்கர்) பயம் கண்டிப்பாக இருக்கும். ஆனால் அதெல்லாம் அவர்களுக்கு அத்துப்படி தான். அந்த நாட்டில் பணத்திற்கு மதிப்பு இல்லீங்க.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.