விசாலுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி!

1445193168-3893

கடந்த ஒரு மாதமாக கோடம்பாக்கத்தில் வெடித்துக்கொண்டிருந்த சரவெடி ஒரு வழியாக முடிவுக்கு வந்துவிட்டதுபோலும் கடும் போட்டியில் நாசர் அணி வெற்றி பெற்றுவிட்டது.

சென்னையில் அக் 18 நடிகர் சங்க தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்று பதற்றத்துடன் அனைத்து நடிகர்களும் காத்துக்கொண்டிருந்தனர். ஏகப்பட்ட விமர்சனங்கள், குற்றச்சாட்டுகள், சரவெடி, மத்தாப்பு, புஸ்பவானம் என பயங்கர மோதல்களின் கடைசியில் நாசரின் பாண்டவர் அணி வெற்றி பெற்று விட்டது.

தேர்தலின் முடிவில் நாசர் தலைவராகவும், பொதுச்செயலாளாராக விஷாலும், பொருளாளாராக கார்த்தியும் வெற்றி பெற்றனர்.

தேர்தலில் கொண்டாட்டத்தில் இருந்த கார்த்தியை கேட்டபோது என்னோட முதல் வேலை எங்கெங்கு நடிகை நடிகர்கள் இருக்கின்றார்களோ அவர்களை தேடிப்பிடித்து பட்டியலில் சேர்ப்பதுதான் என் வேலை என்று கூறியிருக்கின்றார்.

எப்படியோ இனிமேல் கோடம்பாக்கம் பழைய நிலைக்கு திரும்பும் ஆனால் அடுத்து நடக்கும் சட்டப்பேரவை தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பிக்கும்.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.