விமானத்தில் பாம்பு கடத்தல் சோதனையாளர்கள் அலறி ஓட்டம்!

206973_thump

சமீப காலமாக விமானத்தில் அதிகமாக கடத்தல் பொருட்கள் வந்துகொண்டிருக்கன்றன.  நூதன முறையில் கடத்தல் நடைபெறுவதால் நுண்ணறிவுப் பிரிவினர்களால் விமான நிலையப்பயணிகள் சோதனை செய்யப்படுகின்றன. அந்த வகையில் நேற்று மலேசியாவில் இருந்து வந்த பயணிகள் விமானத்தில் கொடிய விஷப்பிராணிகளை கொண்டு வந்து பயணி ஒருவர் மாட்டிக்கொண்டார்.

கோலாலம்பூரில் இருந்து வந்த விமானத்தில் பயணிகள் சோதனை நடைபெறுகையில் திடீரென இவரது பெட்டியில் பாம்பு நெளிவதைப்போல் இருக்கவும் பெட்டியை திறந்து காட்டச்சொல்லியிருக்கின்றார்கள் அவர் திறந்து காட்டுகையில் கொடிய பாம்பு மற்றும் அணில் ஒணான் போன்ற பிராணிகள் இருந்துள்ளது.

இதனால் பதறிப்போன சோதனையாளர்கள் ஒருவழியாக அதை சோதனை செய்கையில் நான்கு பாம்புகள் இருந்துள்ளது.  இது பற்றி அவரிடம் கேட்கையில் அவர் ”இவ்வகை பாம்புகள் மலேசிய மருத்துவ குணம் நிறைந்துள்ள, அதனால் வாங்கி வந்துள்ளேன்” என்று கூறியுள்ளார்.  ஆனால் இம்மாதிரியான விஷப்பிராணிகளை இப்படி எடுத்து வரக்கூடாது என்பதால் அவரை கைது செய்துள்ளனர்.  தாம்பரத்தில் உள்ள வன அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

நல்லவேளையாக ஒரு அசம்பாவிதமும் நடைபெறவில்லை இல்லையெனில் விமானத்தில் உள்ள அனைத்துப் பயணிகளும் பாதிக்கப்பட்டிருப்பர்.

 

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.