வந்தாச்சு சாப்பாடு தரும் ATM மெசின்

atchayams-foodbox-images-photos-53193e8ebf3de9eb15bf2d8e

இப்போது எல்லாமே மெசின் என்று வந்துவிட்டது முன்பு பணமெடுக்க நீண்ட வரிசையில் டோக்கன்போட்டு காத்திருந்து பின் பணத்தினை பெறுவதற்குள் அரை நாள் ஆகிவிடும்.  ATM வந்தவுடன் அதெல்லாம் குறைந்துவிட்டது.  மேலை நாடுகளில் ATM இயந்திரத்தின் மூலம் குளிர்பானங்கள் வழங்கப்படுகின்றது.  அதேபோல் சாப்பாடும் வழங்க முடியாதா என்று அதையும் கண்டுபிடித்துவிட்டார்கள் நம்மவர்கள்.

கோவையை சேர்ந்த சதீஷ் சாமி வேலுமணி என்பவர் இந்த மெஷினை வடிவமைத்தவர். இவர் கண்டுபிடித்த இந்த மெஷினில் ATM கார்டின் மூலம் பணத்தை வழங்கியவுடன் அது பில்லைக்கொடுக்கும் பின் பில்லை எடுத்துக்கொண்டு மற்றொரு மெஷினுக்கு சென்றால் அது சூடான உணவைத்தரும். இந்த தேர்வு செய்யும் முறை கம்ப்யூட்டர் புரோகிராம் வழியாக செய்தது. அதனால் அசைவ சைவ உணவுகளை எளிதாக தேர்வு செய்யலாம்.  இதற்கு Food Box  என்று பெயர்.

அதில் அனைத்து சைவ மற்றும் அசைவ உணவுகளான பிரியாணி, சிப்ஸ், சிக்கன், இட்லி, குருமா, தோசை முதலிய அடங்கிய தனிதனி பாக்கெட்களாக கிடைக்கின்றன.

இப்போது சென்னையில் உள்ள சில தொழில்நுட்ப நிறுவனங்கள்  இந்த படைப்பை பயன்படுத்தி வருகின்றனர்.  இவர் கூறுகையில் இந்த முயற்சி புதுமையானது நாங்கள் தயாரித்தது. ஆனால் நாங்கள் உணவினை வழங்கவில்லை அதற்கு வேறு உணவு கம்பெனிகளுடன் ஒப்பந்தம் செய்து உணவை மெஷினில் நிரப்பி வருகின்றோம் தயாரித்த ஆறு மணி நேர்த்திற்கு மட்டுமே உணவுகிடைக்கும் அதற்கு மேற்பட்ட உணவை மெஷினே வழங்காது இந்த புது முயற்சி மிகுவான ஆதரவை பெற்றுள்ளது நாங்கள் காப்புரிமையும் பெற்றுள்ளோம் என்று கூறினார்.

எப்படியோ நமது தமிழகத்தில் இப்படிப்பட்ட அறிவாளிகள் உள்ளதால்தான் நமக்கு பெருமை எங்கும் கிடைக்கின்றது.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.