”சேர்ந்தே குடிப்போம்” கணவனின் குடியை நிறுத்த மனைவி கையாண்ட புது முறை

ladys whine shop
”திருடனாக பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது” என்று படித்துள்ளோம் அதேபோல் ”குடிகாரனாக பார்த்து திருந்தாவிட்டால் குடியை ஒழிக்க முடியாது” என்று படித்துக்கொண்டிருக்கின்றோம்.  உண்மைதான் மதுவை ஒழிக்க அமைதியாகவும் தீவிரவாதமாகவும் நிறைய போராட்டங்கள் நடத்தியும் ஒன்றும் பிரயோஜனப்படுவதில்லை.  குடி”மகன்” கள் கால்களில் விழுந்து கெஞ்சு பார்த்தும் திருந்தவில்லை ஆனால் ஒரு மனைவி தனது கணவனை திருத்த புது வழியைக் கையாண்டிருக்கின்றார்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கணபதி என்ற பகுதியின் கே ஆர் ஜி நகரில் ஜெயக்குமார் மற்றும் லில்லி என்ற தம்பதியினர் வசித்து வந்தனர்.  அங்கிருக்கும் தனியார் நிறுவனத்தில் ஜெயக்குமார் பணியாற்றி வருகின்றார்.  இவருக்கு ஒரு குழந்தையும் உள்ளது. தினமும் பணியாற்றிவிட்டு வரும் சம்பளத்தில் வாழ்ந்து வந்திருக்கின்றது இவரது குடும்பம்.
ஜெயக்குமார் மதுக்குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டு அவர் தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தகராறு செய்திருக்கின்றார்.  சம்பளத்தை குடித்து அழித்து விடுவதால் வீட்டில் பணத்தட்டுப்பாடும் ஏற்பட்டுவிடுகின்றது.  பொறுமையாகவும் சண்டையாகவும் லில்லி தன் கணவனிடம் எவ்வளவோ சொல்லி சொல்லி பார்த்திருக்கின்றார். கணவன் மீண்டும் மீண்டும் குடித்துவிட்டு வந்திருக்கின்றார்.
கடைசியில்  லில்லி கணவனை பின்தொடர அவர் வழக்கமாக குடிக்கும் பாரில் நுழைவதைப்பார்த்த பாரை கண்டறிந்தார். அடுத்த நாள் கணவன் போவதற்கு முன்னரே அதே பாரில் லில்லி சென்று நாற்காலியில் உட்கார்ந்துக் கொண்டார். கணவன் வரும் வரை காத்திருந்திருக்கின்றார். அங்கிருந்தவர்கள் வெளியே செல்லும் படி கேட்டுக்கொண்டும் அவர் செல்லவில்லை. ஜெயக்குமார் வழக்கமாக உள்ளே நுழைய லில்லி உட்கார்ந்திருப்பதைப் பார்த்தவுடன் அதிர்ச்சியாகி உடனே வெளியே போ என்று கூறினார்.  ஆனால் லில்லி வா ”சோ்ந்தே குடிப்போம் ” எனக் கூறியுள்ளார். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டு லில்லியை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வந்துவிட்டார்.
வீட்டிலும் சண்டைகள் நடக்க தகவல் அறிந்து காவல் துறையினர் வர கணவனைப் பற்றி கூறியதால் அவர்கள் கணவனை கண்டித்துள்ளனர். இனிமேல் குடிக்கமாட்டேன் என  ஜெயக்குமார் கூறியுள்ளார். ஆனால் லில்லி ”இனிமேல் இவள் குடித்தால் நான் இங்கு வந்து போராட்டம் நடத்துவேன்” என்று கூறியுள்ளார்.
இருவரையும் சமாதனப்படுத்திய காவல்துறையினர் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.  மனைவி நடத்திய நூதனப்போராட்டம் சர்ச்சையைக் கிளப்பி வருகின்றது.
வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.