நர்சிங் மாணவி தற்கொலை!

201510150112252222_Nursing-College-student-suicide_SECVPF

விடுதியில் தங்கிப்படித்து வரும் நர்சிங் கல்லூரி மாணவியான பவித்ரா(17) என்பவர் திடீரென மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.  வேலூரின் வாலஜாப்பேட்டையைச் சேர்ந்த பத்மராஜ் என்பவர் கே.கே. நகரில் வசித்து வருகின்றார்.

இவரது மகளாகிய பவித்ரா இவர் சென்னை பெரம்பூர் பகுதியில் உள்ள நர்சிங் கல்லூரியில் முதல் வருடத்தில் படித்து வந்தார். இக்கல்லூரியில் படித்து வரும் அனைத்து மாணவிகளும் அருகில் உள்ள விநாயகபுரத்தில் ஒரு விடுதியில் தங்கி வருகின்றனர். அதில் பவித்ராவும் ஒருவர்.

கல்லூரி முடித்து வந்த பவித்ரா தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த வேளையில் திடீரென மூன்றாவது மாடியில் இருந்து குதித்து விட்டார். இரத்தம் அதிகமாக வெளியேறியதால் மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் பலனில்லாம் பரிதாபமாக பவித்ரா இறந்து விட்டார். ஆனால் ஏனென்று தெரியவில்லை.

காதல் விவகாரமா, அல்லது வேறு பிரச்சினைகளா என பல கோணத்தில் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.