அமேசானின் புதிய விளம்பரத்தந்திரம்!

amazon

இப்போது ஆன்லைன் வர்த்தகத்தில் முதலிடத்தில் இருப்பது அமேசான் தான்.  ஆனாலும் அதன் போட்டி நிறுவனங்களான Ebay மற்றும் Snap Deal ஆகியவைகளும் அதிகமாக கோலோச்சுகின்றன. அதேபோல் இந்தியாவின் FlipKart ன் ஆதிக்கம் அதிகம் இதனால் அமேசான் நிறுவனம் இந்தியாவிற்கு நிறைய சேல்ஸ் ஆஃபர்களைக் கொடுத்து அதிக வாடிக்கையாளர்களை பெற நினைக்கின்றது.

அந்த வகையில் இப்போது செய்தித்தாளிள் முதல் பக்கத்தில் பெரிய விளம்பரத்தை நிறைய சலுகைகள் தருகின்றோம் என அறிவித்திருக்கின்றது.  அந்த விளம்பரத்தில் கூறியுள்ளபடி பார்த்தால் அமேசானின் குறிப்பிட்ட 13 முதல் 17 ஆம் தேதி வரைப்பொருட்களை வாங்கினால் தினமும் ஒரு கிலோ தங்கம் வெல்லலாம் எனவுள்ளது.

இதைப்பார்த்து அமேசான் வெப்சைட்க்கு போனால் அங்கே பொருட்களை வாங்கிவிட்டு தங்கம் வெல்வதற்காக பார்ம் சப்மிசனில் கொடுக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறிவிப்பில் ”தமிழ் நாட்டைச்சேர்ந்தவர்கள் தங்கம் வெல்வதற்கு தகுதி கிடையாது” என்று உள்ளது.  அது எப்படி தமிழகத்தில் அனைத்து பேப்பர்களிலும் தமிழில் விளம்பரம் செய்துவிட்டு பின் தமிழர்களுக்கு பங்கேற்க தகுதியில்லை என்று சொன்னால் எப்படி சாத்தியமாகும்.

அதில் வாடிக்கையாளர்களை ஏமாற்றுவதற்காக இந்த மாதிரி கொடுக்கப்பட்டுள்ளது என்று தந்தை பெரியார் திராவிடக் கழகத்தார்கள் கோவையில் நகர காவல்துறை ஆணையரிடம் புகாரைக் கொடுத்துள்ளனர்.

இவ்வாறு பொய்விளம்பரத்தைப் பரப்பி மக்களை தன்பக்கம் இழுத்தாலும் சில பேர்களே ஏமாறுவார்கள், மற்றவர்களை ஏமாந்தவர்கள் எச்சரித்து சமூக வலைதளத்தில் POST போட்டுவிடுவார்கள் என்று ஆமேசானின் மூளைக்கு எட்டாத காரணமே அதன் பின்னடைவுக்கும் காரணமாகப் போகின்றது.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.