ஓட்டு போடுவதற்காக இரண்டு இலட்சம் செலவு செய்த வினோதமான வாலிபர்

download (37)

இப்போது பீகார் சட்டப்பேரவைக்கு தேர்தல் 5 கட்டங்களாக நடக்கின்றது. அதில் சில தொகுதிகளுக்கு 12ல்  வாக்குப்பதிவுகள் அமைதியாக நடந்து முடிந்துள்ளது.  அதில் மொத்த மக்கள் தொகையில் 55 சதவீதம் மட்டுமே ஒட்டுப் பதிவு நடைபெற்று வருகின்றது. இதற்கு காரணம் அங்குள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் வேலைக்காக வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாட்டிற்கு சென்று விடுகின்றனர்.

தேர்தல் சமயத்தில் வர முடியவில்லை என்று தேர்தலைப் புறக்கணித்தனர். ஆனால் ஒருவர் தனது ஒட்டு மிகவும் முக்கியம் என்று கருதி சவூதியில் இருந்து 2 லட்சம் செலவு செய்து விமானத்தில் இந்தியாவிற்கு வந்து தனது வாக்கை பதிவளித்துள்ளார். இது மிகவும் பிரபலமானது தான்.ஓட்டுப்போட காசு வாங்குபவர்கள் இருக்கையில் தனது உரிமையை பயன்படுத்த பணத்தை செலவு செய்தது பெரிய விசயம் தான்.

இவர் பீகாரின் சமஜ்திபூர் பகுதியில் வசித்துவரும் முகமது அதிகர் ரஹ்மான் ஆவார். சவூதியில் ரியாத்தில் உள்ள Furniture ஒன்றில் பணியாற்றிவருகின்றார்.  தான் வாக்களிப்பது என்பது முக்கியக்கடமை இந்த வாக்கு தவறினால் அடுத்த 5 வருடங்கள் கழித்துதான். ஆகவே என் கடமையை நிறைவேற்றவே ஆயிரங்களை செலவு செய்து வந்தேன். என்று பெருமிதத்துடன் கூறுகின்றார்.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.