5-ஆம் வகுப்பு மாணவன் ஜாவா வில் சென்டம்.

Screenshot_64-600x330

கணினி புரோகிராமர்களுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும் ஜாவாவைப்பற்றி இருக்கிற மொழிகளிலேயே ஜாவா தான் கடினமான மொழி என்று ஆனால் இதன் பயன்கள் அதிகம்.  கணினி வல்லுநர்கள் கூட ஜாவாவின் முக்கியமான Function களை ஞாபகம் வைத்துக்கொள்ள கஷ்டப்படுவார்கள். ஆனால் 10 வயது  இந்தியச்சிறுவன் ஜாவாவில் கவனத்தை செலுத்தி ஆரக்கில் நடத்திய தேர்வில் சென்டம் எடுத்துவிட்டான் என்பது ஆச்சரியத்தை தருகின்றது.

புது டில்லயைச்சேர்ந்த மாணவன் ரூனில்ஸாதான் அந்த சிறுவன். இவன்தான் ஆரக்கில் நடத்திய தேர்வில் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளான். சிறுவயதில் இருந்தே கணினியின் மீது இருந்து வரும் ஆர்வத்தால் அனிமேசன் சாப்ட்வேர்களைப் பழகியவன் திடீரென C, C++ மொழியின் மீது ஆர்வம் வந்து கற்க ஆரம்பித்தபோது ஜாவாவை கற்றுக்கொண்டான் ஒரு விடுமுறையை முழுவதும் ஜாவாவுடன் கழிக்கின்றானாம்.

அவனது குடும்பத்தார்கள் வலுவான கணினி பின்புலத்தை உடையவர்கள்.  அதனால் சிறுவனுக்கும் கணினியின் மீது ஆர்வம் வந்ததாம். அவனுக்கு இன்னும் ஆன்டிராய்டு மற்றும் ஐபோன் அப்ளிகேசன் உருவாக்க ஆர்வமாம். சிறுவன் இன்னொரு பில் கேட்ஸ்க்காக மாற வாழ்த்துக்கள்.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.