பிரம்மபுத்திராவில் சீனாவின் அணை!

download (35)
images (36)

பிரம்மபுத்திரா திபெத்தின் மலைகளில் பயணிக்கும் எழில் மிகு காட்சி

இரு மாநிலத்திற்கு இடையேயும் நதிப்பிரச்சினைகள் என்றால் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயும் நதிப்பிரச்சினைகள் உள்ளது.  பிரம்மப்புத்திரா ஆறு இந்தியாவின் கிழக்கு மாநிலங்களுக்கு வற்றாத ஜீவநதியாகும். இது கயிலாய மலையில் பிறந்து ஏறத்தாழ 2700 கிமீ கடந்து சென்று வங்கத்தில் கலக்கின்றது. இந்த ஆற்றினை நம்பி அஸ்ஸாம், வங்கம், அருணாச்சல பிரதேசம் மாநிலங்கள் செழிப்புடன் வாழ்ந்து வருகின்றனர்.

ஆனால் வழக்கம் போல சீனாவின் ஆதிக்கம் தொடங்கியது. அந்த ஆறு திபெத்தில் பிறந்து அங்கிருக்கும் திபேத் மலைவழியாக அருணாச்சலபிரதேசத்தில் சமவெளியை அடைந்து வருகின்றது. இதில் 1800 கிலோமீட்டர் சீனாவின் ஆதிக்கத்தில் இருந்து வருகின்றது. சீனாவின் திபெத் ஒரு வறண்ட பிரதேசம் அங்கே பிரம்மபுத்திராவைப்போல ஆறுகள் கிடையாது. நீர் மின்சாரத்திற்கு ஆற்றைப் பயன்படுத்திவிடலாம் என்று பல முறை முயற்சி செய்தது.

download (36)

சீனாவின் புதிய திட்டம்

இப்போது ஒரே முடிவாக 1000கோடி செலவில் அணைக்கட்ட முடிவெடுத்து பணிகளை துவங்கியுள்ளது.  இதனால் இந்தியாவிற்கு வரும் நீர் அளவு குறைந்து வரும். இதனால் மாநிலங்கள் அவதியுறும். என்பதற்காக இந்தியா எதிர்த்து வந்தது.  ஆனால் சீனா எப்போதும் தமது எல்லையை விரிவுபடுத்தும் நோக்கத்தில் உள்ளது. இதைவைத்து கிழக்கு மாநிலங்களை ஆக்கிரமித்து விடலாம் என்ற எண்ணத்தில் செயல்படுகின்றது.

சீனாவின் எல்லைப்பிரச்சினை அதிகமாக நடப்பது அருணாச்சலத்தில் தான்.  அங்கு மட்டும் தான் சமவெளி உள்ளது. சீனா எப்போதும் இந்தியாவிற்கு பல வழிகளில் பிரச்சினைகளை உருவாக்கிக்கொண்டுதான் இருக்கின்றது.

மேலும் இந்த ஒரு திட்டத்தால் சீனாவுக்கு வருடத்திற்கு திபெத்திற்கு தேவையான மின்னாற்றலை இரண்டு பங்காக கொடுக்க முடியும். ஆனால் இந்த திட்டத்தால் சீனா ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கப்பார்க்கின்றது.  இந்த மாதிரி சூழலில் சீனாவைச் சேர்ந்த அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து தான் செயல்படுகின்றது.

நம் அரசியல் கட்சிகள் ஒருவரை யொருவர் பார்த்துக்கொண்டு இருப்பதால் நமது நாட்டை நான்கு பக்கமும் பிட்டு பிட்டு தின்று கொண்டு இருக்கின்றது மற்ற நாடுகள்.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.