முதல்வரைப் பார்க்க போலிஸ் உடையில் சென்ற விசுவாசி

dinesh_2582820f

தங்கள் தலைவரைப் பார்க்க எல்லோரும் நிறைய தியாகங்களை, வழிகளை மேற்கொள்கின்றனர். ஆனால் கன்னியாகுமரியைச் சேர்ந்த தினேஷ்(30) மிகவும் புத்திசாலி தனமாக முதல்வரைப் பார்க்க திட்டமிட்டுள்ளார்.

நேற்று காலையில் தலைமைச் செயலகத்துக்கு தினேஷ் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் பயன்படுத்தும் உடையை அணிந்துக் கொண்டு பைக்கில் வந்துள்ளார். தலைமைச் செயலகத்தில் இருக்கும் காவலாளிகள் அவரை நிஜ போலிஸ் என்று நினைத்து அவருக்கு சல்யூட் அடித்துள்ளனர். அவரும் அதை ஏற்றுக்கொண்டு பதிலுக்கு அடித்துள்ளார். பின்னர் தலைமைச் செயலகத்தில் அடிக்கடி சுற்றி சுற்றி வந்திருக்கின்றார்.

மேலும் முதல்வரின் கார் நிறுத்தும் அதே இடத்தில் பைக்கை நிறுத்தியுள்ளார்.  இதனால் சந்தேகம் அடைந்த போலிஸார் அவரை விசாரிக்க அவர் போலிஸ் இல்லை என தெரியவந்தது. அவர் முதல்வரைப் பார்ப்பதற்காக வந்துள்ளார்.  முதல்வரின் பெரிய விசுவாசியாக தன்னைக் கூறினார். எளிதாக பார்க்க வேண்டும் என்பதற்காக காவல் உடையில் வந்திருப்பது தெரியவந்தது. ஆனால் அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கு முழுப் பொறுப்பும் காவல் துறையை மட்டுமே சென்றடையும். ஆனால் விழிப்புடன் இருந்து கண்டுபிடித்து விட்டார்கள்.

பின் அவரை விசாரித்து காவல் துறையில் வைத்திருந்தனர். அப்போது அவர் ” நான் எந்தத் தவறும் செய்வதற்கு வரவில்லை முதல்வரை பார்க்க வேண்டும் என்பதற்காக மட்டுமே வந்துள்ளேன்“  என்று அப்பாவியாக கூறுகின்றார்.  அவர் மனநலம் பாதிக்கப்பட்டவரா என சந்தேகிக்கின்றனர்.

என்ன இருந்தாலும் இப்படி தலைமைச் செயலகத்தில் நடப்பது இரண்டாம் முறை ஏற்கனவே தீக்குளிப்பு ஒன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.