பள்ளிச் செல்லும் வித்தியாசமான பூனை

images (35)
bubba-the-cat

பாடத்தை கவனிக்கும் பூனை புப்பா

உலகில் வித்தியாசமான நிகழ்வுகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அதற்கு எப்போதும் பஞ்சமிருந்தது கிடையாது ஆனால் வித்தியாசமான நிகழ்விலும் நம்பமுடியாத நிகழ்வுகள் நடக்கின்றன.  அப்படித்தான் அமெரிக்காவில் ஒரு வீட்டுப் பூனையொன்று தினமும் பள்ளிச் சென்று வருகின்றது.

கலிபோர்னியாவில் உள்ள சான் ஜோன்ஸ் டவுனைச்சேர்ந்த ஆம்பர் மேரி என்ற பெண் புப்பா என்ற ஒரு பூனை ஒன்றை வளர்த்து வருகின்றார். மிகவும் சுறு சுறுப்பான இந்தப்பூனை எப்போதும் விளையாடிக்கொண்டே இருக்குமாம்.  2008 ல் இருந்து இந்தப்பூனை வளருகின்றதாம். ஆம்பரின் மகன்கள் இரண்டு பேர் உள்ளனர் அவர்களின் பெயர்கள் மேத்யு, மார்க் ஆகியோர்களாவர். இவர்கள் அந்தப் பகுதியில் உள்ள பள்ளியில் படித்துவருகின்றார்கள்.

enhanced-419-1440278363-1

பள்ளியில் புப்பாவிற்கு கொடுக்கப்பட்ட அடையாள அட்டை

தினமும் பள்ளிச் செல்லும் போது கவனித்துக் கொண்டிருந்த பூனை இவர்களுடன் பள்ளிக்கு ஒரு நாள் சென்று விட்டதாம். அப்போது பள்ளியின் சூழல் பிடித்துப்போக தினமும் பள்ளிக்கு அவர்களோடு சென்று பள்ளியைச் சுற்றி வருமாம்.

Bubba-5

இடைவேளையில் உணவு உண்ணும் புப்பா

பின் மேத்யுவின் வகுப்பறைக்கு சென்று பாடங்களை படிக்கின்றதாம்.  மிகுந்த உன்னிப்பாக கவனிக்கின்றதாம். பின் இடைவெளியில் அங்குள்ள மணி அடித்தவுடன் வெளியே சென்று தூங்கி மாணவர்களுடன் விளையாடிவிட்டு மீண்டும் மணி அடித்தவுடன் வந்துவிடுமாம். தினமும் மறக்காமல் பள்ளிக்கு சென்று வருவதால் வெகு விரைவில் பள்ளியில் உள்ள அனைவர் மனதிலும் இடம் பிடித்தது மட்டுமல்லாமல் பள்ளியில் அடையாள அட்டையிலும் இடம் பிடித்துவிட்டதாம்.

பள்ளிக்கு முதல் மாணவனாக வந்து வாசலில் உட்கார்ந்திருக்குமாம். இதனைக்கண்ட ஆசிரியர்கள் வகுப்பறையில் அதற்கென தனி நாற்காலி மேஜைக் கொடுத்துவிட்டார்களாம். மற்ற மாணவர்களுக்கு முன்னுதாரணமாக புப்பா உள்ளதாம். உலகில் ஒரு பூனை பள்ளிச்சென்று வருவதால் இதற்கு அப்பள்ளியில் ரசிகர் மன்றம் இருக்கின்றதாம்.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.