மூக்கை வாயால் கடித்து கின்னஸ் சாதனை செய்த சீனர்

images (33)

சீனாவில் உலகில் யாராலும் செய்ய முடியாத கின்னஸ் சாதனையொன்றை செய்த முதல் மனிதர் இவராகத்தான் இருப்பார் அப்படி என்ன சாதனை செய்தார் என்றுதானே கேட்கின்றீர்கள். தனது மூக்கை கண்ணாபின்னாவென்று திருகி வாயுக்குள் நுழைத்து கடிக்கின்றார்.  விவேக் காமெடியில் வருவதைவிட இது உண்மையாகவே இருக்கின்றது.article-2155552-13795DE6000005DC-642_634x473

சீனாவைச்சேர்ந்த Tang Shuquan, என்றவர்க்கு 43 வயதாகின்றது.  எதையாவது புதுமையாக சாதிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் எப்போதும் இருப்பவர்.  டாங்க் சகுவான் முயற்சி செய்தது நிச்சயமாக யாராலும் செய்ய முடியாது.  நாக்கால் மூக்கின் நுனியைக் கூட தொட நம்மவர்கள் செய்ய கஷ்டப்படுவார்கள். ஆனால் இவர் முழு மூக்கையும் வாய்க்குள் கொண்டு வந்து விட்டார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் அவ்வளவு திறமை அவருக்கு.

இதை அவர் செய்கையில் தனது முழு திறமையையும் பயன்படுத்தி தாவாய் பகுதியை அழுத்துகின்றார்.  இதனால் அவரது மூக்கு நுனியானது உள்ளே நுழைந்து விடுகின்றது. பின் மிகவும் சிரமப்பட்டு மூக்கை கடிக்கின்றார்.  இவர் பட்ட கஷ்டத்திற்கு பலனாக இவருக்கு கின்னஸ் சாதனை கொடுத்துவிட்டார்கள்.  இவரைப் போல் நிறைய பேர் செய்து பாவம் தாவாய் உடைந்து கவலைப்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.b

மேலும் வேறு யாராவது என்போல் செய்தால் ரொக்கப்பரிசு தருவதாக கூறியுள்ளார்.  யாரும் இதை முயற்சி செய்து பார்க்காதீர்கள் அப்பறம் ஆபத்துகளுக்கு எங்கள் நிர்வாகம் பொறுப்பல்ல.

 

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.