பன்றி மூக்குடைய எலியினம் கண்டுபிடிப்பு

New-rat-720x480

நம் இந்தியாவில் அதிகமாக பெருச்சாளியினம் மற்றும் சுண்டெலியினம் அதிகமாக இருக்கும்.  இன்னும் சிலர் வௌ்ளை எலிகளை அழகுக்காக வளர்ப்பர். புதிய இனமாக பன்றி முக்குடைய எலி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது இதற்கு haiyorinomais stimka ”ஹையோரினோமைஸ் ஸ்டீம்கா” என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த எலியானது கூர்மையான மூக்குக்குப்பதில்  பன்றியைப்போல் மூக்கினைக் கொண்டது. இவற்றின் வாசனை அறியும் திறன் மிக அதிகமாக இருக்கின்றது. இந்தோனேசியாவில் இந்த எலியினம் கண்டுபிடிக்கப்பட்டது.  தற்செயலாக கூண்டு வைத்துக் காத்திருந்த போது இந்த விலங்கினம் மாட்டிக்கொண்டதாம்.

மற்ற எலியினத்தைப் போல் அல்லாமல் இந்த எலியினம் மிக அதிகமாக வளர்ச்சி பெறுகின்றதாம். மேலும் சுகாதாரமாக இருக்கின்றதாம்.  மற்ற எலிகள் ஒரு பெரிய அங்காடியையே ஒரு வாரத்தில் அழுக்காக்கி விடும்.  ஆனால் இந்த வகை எலிகள் அப்படி இல்லையாம்.  பெரிய காதுகளையும், பெரிய தலையையும் வைத்துக்கொண்டு பிறந்த பன்றிகுட்டியைப் போல இருக்கின்றதாம்.

இந்தோனேசியாவின் அருங்காட்சியத்தில் இந்த எலிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கின்றன.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.