முதலாளியின் உயிரைக் காப்பாற்றிய நாய்

download (34)

பொதுவாக மனிதனால் முதலில் பழக்கப்படுத்தப்பட்டு வளர்க்கப்பட்ட விலங்கு நாய் தான். நாயும் மனிதனிடம் தனது முழுவிசுவாசத்தையும் காட்டும். அதைப் பறைசாற்றும் விதமாக அமெரிக்காவில் சேற்றில் மூழ்கிய தனது எஜமானரை காப்பாற்றியிருக்கின்றது ஒரு நாய்.

அமெரிக்காவில் ஒகியோ மாகாணத்தில்  ஒரு அணைக்கட்டிற்கு சென்றவர் எதிர்பாராத விதமாக அங்குள்ள சேற்றில் மாட்டிற்கொண்டார். உடன் அவரது நாய் இருந்தது.  பாதியுடல் சேற்றின் சகதியில் சிக்கி மூழ்கிக் கொண்டிருந்தது. தன் கையில் இருந்த செல்போனில் அவசர எண்ணுக்கு தொடர்பு கொண்டு மீட்புப்படையை வரவழைத்தார். அவர்களும் விழி பிதுங்கி நிற்க அவரது வளர்ப்பு நாய் காப்பாற்றியது.  நாயின் கழுத்தில் கயிற்றைக் கட்டி அவரை நீந்திக் கொண்டே நாய் வெளியே இழுத்துவந்தது.  என்ன தான் மனிதன் எடை அதிகமாக இருந்தாலும் நீரில் அவனது எடை குறைந்துவிடும். இதனால் நாய் எளிதாக எஜமானை கரைச் சேர்த்துவிட்டது.

கடுங்குளிரையும் பாராமல் வளர்ப்பு நாய் தனது விசுவாசத்தைக் காட்டுவதற்காக உயிரையும் பணையவைத்து எஜமானரை காப்பாற்றியுள்ளது. சமுக வலைதளத்தில் அதிக லைக் களைப் பெற்றுள்ளது.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.