இரட்டைத்தலையுடன் பிறந்த குழந்தை

article-2582608-1C5C85A600000578-914_634x382

இந்தியாவில் கடந்த வாரம் சுபாஷ் மற்றும் ஊர்மிளா தம்பதியினருக்கு இரண்டு தலையுடன் கூடிய குழந்தை(கள்) பிறந்தது.  பொதுவாக இரட்டைக் குழந்தைகள் என தாயார் நினைத்திருந்தார் ஆனால் இரண்டு தலையுடன் கூடிய குழந்தையை கண்டவுடன் தாயார் அதிர்ச்சியடைந்தார்.

article-2582608-1C5C857D00000578-593_634x431

மகள் சாலினியுடன் பெற்றோர் சுபாஸ்-ஊர்மிளா

 

தாயார் பிரசவத்திற்காக ஒரு தில்லியில் மேல்நிலை மருத்துவமனைக்கு சென்றார் அங்கே அவர் சோதிக்கப்பட்டு இரட்டைக்குழந்தை என நினைத்திருந்தார்.  அனால் ஒரு குழந்தை இரட்டை தலையுடன் பிறந்து விட்டது. அக்குழந்தையானது இரட்டைக்குழந்தை எனக் கருதினால் இரண்டு தலைகளைக் கொண்டு ஒரு மனித உடலை பகிர்கின்றது என டாக்டர் சிகா மாலிக் கூறியுள்ளார்.

மேலும் முக்கிய உறுப்புகளை இரண்டு குழந்தைகளும் பகிர்ந்து கொள்கின்றன.  ஒரு குழந்தை அழும்போது மற்றோர் குழந்தை உறங்குகின்றது.  இரண்டு தலைகளும் வலுவாக உள்ளதாம். இதில் சங்கடமான விசயம் என்ன வென்றால் எக்காரணம் கொண்டும் இருவரையும் பிரிக்க முடியாதாம். பிரித்தால் இறந்துவிடுவார்களாம்.

article-2582608-1C5C85C100000578-830_634x830

மருத்துவமனையில் இரட்டை குழந்தைகள்

பெற்றோர்கள் சுபாஸ் மற்றும் ஊர்மிளா பரம ஏழைகளாம்.  சுபாஸ் ஒரு சைக்கிள் கடையில் வேலை செய்கின்றாராம் ஏற்கனவே மூன்று வயது மகள் சாலினி உள்ளாராம். கடவுளை மட்டுமே நம்பியிருக்கின்றார் என சோகத்துடன் கூறினார்.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.